மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் புகழைப் போற்றும் வகையில் காரைக்கால் முதல் புதுச்சேரி வரையில் அமைக்கப்படும் 100 அடி சாலையில் உள்ள இந்திராகாந்தி சிலை - ராஜீவ்காந்தி சிலை வரைக்குட்பட்ட பகுதிக்கு கலைஞர் கருணாநிதி சாலை என்று பெயர் சூட்ட, அம்மாநில அமைச்சரவையில் கடந்த ஆண்டு முடிவு எடுக்கப்பட்டது.
அதேபோல காரைக்கால்-திருநள்ளாறு புறவழிச்சாலைக்கும் அவரது பெயரைச் சூட்ட முடிவு எடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதற்கான கோப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.