2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பண மோசடி, வரி ஏய்ப்பு தொடர்பாக கர்நாடக முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவருமான டி.கே. சிவக்குமார் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.
இதனையடுத்து, பண மோசடி வழக்கு தொடர்பாக ஆஜராகுமாறு சிவக்குமாருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அதனை ரத்து செய்ய வேண்டும் என்று சிவக்குமார் அனுப்பிய மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் சம்மனை நிராகரித்தது. இந்நிலையில், டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் டி.கே. சிவக்குமார் நேரில் ஆஜராகினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “சட்டம் மீது நம்பிக்கையுடவன் நான், எனக்கு அவர்கள் ஒத்துழைப்பு தருவதால் நானும் அவர்களுக்கு ஒத்துழைப்பு தருகிறேன். எதற்காக பண மோசடி தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளார்கள் என்பது தெரியாது. அவர்கள் பார்த்த பணம் என்னுடையது, நான் சம்பாதித்த பணம்” என்று கூறினார்.