டெல்லியில் ஜல் போர்டின் விழிப்புணர்வு கூட்டத்தில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், கழிவுநீர் வடிகால்களை சுத்தம் செய்யும்போது துப்புரவு பணியாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழக்கின்றனர். விஷவாயுவினால் பலர் உயிரிழந்திருக்கும் நிலையில், இதுபோல் மீண்டும் நேராமல் இருக்க அவர்களுக்கு பாதுகாப்பு உபகரணம் மிகவும் அவசியம் என்றார்.
மேலும் அவர், பாதுகாப்பு உபகரணமின்றி துப்புரவாளர்கள் பணியில் ஈடுபடக்கூடாது, மீண்டும் உயிரிழப்பு நேரக்கூடாது. ஆகவே, அவர்களுக்கு இலவச பாதுகாப்பு உபகரணங்கள் விரைவில் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
கடந்த மாதம் குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில், வடிகால்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ஏழு துப்புரவு பணியாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.