ETV Bharat / bharat

’கர்நாடகாவில் பாஜக ஆட்சி தானாகவே கவிழும்’ - சித்தராமையா - எடியூரப்பா

பெங்களூரு: அரசியலில் கர்நாடக பாஜக தற்போது கடினமாக காலகட்டத்தில் உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் கர்நாடக முதலமைச்சருமான சித்தராமையா விமர்சித்துள்ளார்.

Siddaramaiah
Siddaramaiah
author img

By

Published : Jun 3, 2020, 8:42 PM IST

பாஜகவைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் தன்னை சந்தித்து அதிருப்தியை வெளிப்படுத்தியதாக கர்நாடகா எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார். ஏற்கனவே பாஜகாவைச் சேர்ந்த அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்கள் கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், சித்தராமையா இந்த கருத்தை தெரிவித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, “பாஜகவுக்குள் கருத்து வேறுபாடு நிலவுவது என்பது உண்மைதான். இது இன்னமும் தொடரும். பாஜகவில் நடக்கும் உட்கட்சி பூசல் விவகாரத்தில் நாங்கள் தலையிடுவதில்லை. பாஜக ஆட்சி கர்நாடகாவில் தானாகவே கவிழும். அதை நாம் பார்க்கலாம்.

மூத்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்பட 12க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சமீபத்தில் வடக்கு கர்நாடகாவைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் உமேஷ் கட்டியின் இல்லத்தில் பாஜக அதிருப்தி எம்எல்ஏக்கள் சந்தித்துப் பேசியுள்ளனர்.

கூட்டத்தில் கலந்துகொண்ட பல சட்டப்பேரவை உறுப்பினர்கள் எடியூரப்பாவின் செயல்பாடுகளால் அதிருப்தியில் உள்ளனர் எனத் தெரிகிறது. அதுமட்டுமின்றி எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா அரசு நிர்வாகத்தில் தலையீடுவதற்கு எம்எல்ஏக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

அரசியலமைப்பிற்கு விரோதமான முதலமைச்சர் என விஜயயேந்திராவை மக்கள் அழைக்கின்றனர். கர்நாடக பாஜக தற்போது கடினமாக காலகட்டத்தில் உள்ளது” என்றார்.

இதையும் படிங்க:அதிருப்தி எம்.எல்.ஏக்கள் பற்றி கவலைப்பட வேண்டாம் - எடியூரப்பாவுக்கு அமித் ஷா நம்பிக்கை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.