இதுதொடர்பாக ஃபோர்டிஸ் எஸ்கார்ட்ஸ் மருத்துவமனை தலைவர் ரவி சேகர் ஜா கூறுகையில்,"கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுக்க கைகளை கழுவுவதோடு, உங்கள் ஸ்மார்ட்போனையும் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். கிருமி நீக்கம் செய்வதற்கான சிறந்த முறையான ஆல்கஹால் சார்ந்த கிருமிநாசினியை ஒவ்வொரு 90 நிமிடங்களுக்கும் பயன்படுத்துங்கள்.
உங்கள் கண்கள், வாய் அல்லது மூக்கைத் தொடுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். கைப்பேசி கவர், புளூடூத் உள்ளிட்ட சாதனத்தைப் பயன்படுத்துவதும், முடிந்தவரை உங்கள் கைப்பேசியை அடிக்கடி தொடுவதைத் தவிருங்கள். உங்கள் கைப்பேசியை ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு முறையாவது சுத்தம் செய்ய பரிந்துரைக்கிறோம் ”
கடந்த 2018 ஆம் ஆண்டில் மின்சாதங்களுக்கான காப்பீட்டு வழங்கும் இன்சூரன்ஸ் 2 கோ வெளியிட்ட ஆய்வு அறிக்கையில், ‘கழிப்பறை இருக்கையில் இருக்கும் கிருமிகளை விட மூன்று மடங்கு கிருமிகள் ஸ்மார்ட்போன் தொடுதிரையில் இருக்கும். ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் இருபது நபர்களில் ஒருவர் தான், சராசரியாக ஆறு மாதங்களுக்கும் குறைவான காலங்களில் தனது கைப்பேசிகளை சுத்தம் செய்வது கண்டறியப்பட்டது’ என்று வெளிப்படுத்தியது.
புது தில்லியில் உள்ள ஸ்ரீ பாலாஜி செயல் மருத்துவ நிறுவனத்தின் மூத்த நுண்ணுயிரியல் நிபுணர் ஜோதி முட்டா,‘கரோனா வைரஸுக்கு பயப்படும் நேரத்தில், ஸ்மார்ட்போன்கள் ஆல்கஹால் அடிப்படையிலான கிருமிநாசினியைக் கொண்டு கிருமி நீக்கம் செய்யப்பட வேண்டும். ஒரு சிறிய சுத்தமான காட்டன் துணியில் சில துளிகள் அதனை ஊற்றி, கைப்பேசிகளைச் சுத்தப்படுத்துவதைத் தொடருங்கள்.
குறிப்பாக, இந்த வழக்கமான சுவாச நோய் அல்லது காய்ச்சல் போன்ற அறிகுறிகளால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் மாலை வேலை முடித்து வீட்டிற்கு வரும்போதும், காலையில் வெளியே செல்வதற்கு முன்பும் இந்த செயல்முறையை நீங்கள் செய்யலாம்” என்கிறார்
இங்கிலாந்தில் உள்ள சர்ரே பல்கலைக்கழகத்தின் மற்றொரு ஆய்வு, ‘உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள முகப்பு பொத்தானில் மில்லியன் கணக்கான பாக்டீரியாக்கள் குடிக்கொண்டிருக்க அதிகம் வாய்ப்பு இருக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம் கோவிட்-19 உலகளாவிய பெருந்தொற்று நோய் என அறிவித்திருப்பது கவனிக்கத்தக்கதாகும்.
இதையும் படிங்க : கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1071 ஆக அதிகரிப்பு