கோவிட்-19 பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, செப்டம்பர் 14ஆம் தேதி நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியது.
இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன் எடுக்கப்பட்ட கரோனா சோதனையில் சுமார் 25 எம்பிக்களுக்கும் 50 நாடாளுமன்ற ஊழியர்களுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கிய பின்னரும்கூட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் பிரஹ்லாத் படேல் ஆகியோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.
இவர்கள் இருவரும் குளிர்காலக் கூட்டத்தொடரில் முதல் சில நாள்கள் விவாதங்களில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. இதேபோல மேலும் சில நாடாளுமன்ற ஊழியர்களுக்கும் கோவிட்-19 உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக குளிர்கால கூட்டத்தொடரை விரைவில் முடிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி வரும் செப்டம்பர் 23 அல்லது 24ஆம் தேதியுடன் குளிர்கால கூட்டத்தொடர் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படும் - மத்திய கல்வி அமைச்சகம் தகவல்