நிர்பயா பாலியல் குற்றவாளிகள் நால்வருக்கு வருகிற 22ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதாக டெல்லி உயர் நீதிமன்றம் அறிவித்தது. இதற்கான மரண தண்டனை உத்தரவு குற்றவாளிகள் நால்வரிடமும் கடந்த 7ஆம் தேதி வழங்கப்பட்டது.
இதையடுத்து அவர்கள் ஒவ்வொருவராக குடியரசுத் தலைவருக்கு கருணை மனுக்கள் அளித்தனர். இந்த மனுக்கள் உடனடியாக நிராகரிக்கப்பட்டது. தொடர்ந்து குற்றவாளிகளில் இருவர் நீதிமன்றத்தில் கடைசி நிவாரண மனுக்களை தாக்கல் செய்தனர்.
அந்த மனுக்களும் நிராகரிக்கப்படவே, ஒருவர் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அளித்தார். அந்த மனுவை நீதிபதி உடனடியாக தள்ளுபடி செய்தார். எனினும் கருணை மனு நிராகரிக்கப்பட்டு இரு வாரங்கள் குற்றவாளியை தூக்கில் போட முடியாது.
ஆகவே குற்றவாளிகளுக்கு தண்டனை நிறைவேற்றும் தேதி 22இல் இருந்து அடுத்த மாதம் ஒன்றாம் தேதிக்கு மாற்றப்பட்டது. இதுதொடர்பாக நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி, “குற்றவாளிகளுக்கு தண்டனை நிறைவேற்றப்படும் தேதி தொடர்ந்து தள்ளிக்கொண்டே போகிறது. இது எனக்கு நீதிமன்றம், அரசு மீது நம்பிக்கையின்மையை ஏற்படுத்தி வருகிறது” என்றார்.
இதையும் படிங்க : 'என் மரணம் ஒட்டுமொத்த குடும்பத்தையும் அழித்துவிடும்' -நிர்பயா குற்றவாளி உருக்கம்