எதிர்வரும் 2021ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக இன்று (டிச.18) ஊடகங்களைச் சந்தித்துப் பேசிய நரோட்டம் மிஸ்ரா, “எதிர்வரும் மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் தலைமையிலான அராஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். நிலக்கரி, போதை மருந்து மாஃபியாக்களை நடத்திவரும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இனி ஒருபோதும் ஆட்சியில் அமர முடியாது என உறுதியாக நம்புகிறேன். மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானின் அரசு, இந்திய அரசியலமைப்பை பின்பற்றி நடக்கிறது.
காங்கிரஸ் மூத்த தலைவர்களும், முன்னாள் முதலமைச்சர்களுமான திக்விஜய் சிங், கமல் நாத் ஆகியோரது மோசமான ஆட்சியின் கீழ் இருந்த அரசுகள் தான் மத்தியப் பிரதேச மாநிலத்தை கீழ் நிலைக்கு கொண்டு சேர்த்தன. அரசு ஊழல் நிறைந்த நிர்வாக சீர்கேடான அவர்களது அரசு பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தின.
திக்விஜய் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நக்சல்பாரிகளின் அட்டூழியங்கள் மிகுதியாய் இருந்தன. நக்சல்களின் தாக்குதல்களை காங்கிரஸால் தடுக்கவோ, முறியடிக்கவோ முடியவில்லை.
ஆனால், தற்போது நடைபெற்றுவரும் பாஜக தலைமையிலான அரசு அதனை முழுமையாக தடுத்து நிறுத்தியுள்ளது. சிவராஜ் சிங் சவுகானின் குடிமக்களுக்கு உச்சபட்ச பாதுக்காப்பை அளித்துள்ளது.
சிறு சிறு குழுக்கள் தான் போதிய விழிப்புணர்வற்று அரசுக்கு எதிராக போராடி வருகின்றன. குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) எதிர்த்து போராடியவர்கள் தான் இப்போது புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் போராடி வருகின்றனர். அந்த கும்பல்களின் போராட்டம் வெற்றி பெறாது” என்றார்.
இதையும் படிங்க : ஹத்ராஸ் வழக்கு: 4 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்