ETV Bharat / bharat

'கரோனாவால் நீரிழிவு நோயாளிகள் இறக்க அதிக வாய்ப்பு' - அதிர்ச்சித் தகவல்! - tamil latest news

டெல்லி: கரோனா வைரஸ் தாக்கினால், நீரிழிவு நோயாளிகள் உயிரிழக்க 50 விழுக்காடு கூடுதல் வாய்ப்புள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

dsd
ds
author img

By

Published : May 19, 2020, 4:13 PM IST

நாட்டை உலுக்கும் கரோனா வைரஸ் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்களைத் தாக்கி வருகிறது. இதுவரை இந்தியாவில் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கரோனா வைரஸ் தாக்கி இறப்பவர்கள் குறித்து, நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், " கரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்த 70 விழுக்காடு மக்களுக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகக் கோளாறு, இதய பிரச்னை ஆகியவற்றில் ஏதேனும் ஓன்று இருந்துள்ளது. இந்த ஆய்வு முடிவிற்கு மருத்துவ நிபுணர்களும் ஆதரவு தெரிவிக்கின்றனர். ஏற்கெனவே பிரச்னை உள்ள மக்களுக்கு நோயின் தாக்கம் அதிகளவில் காணப்படும் என்கின்றனர்.

இதுகுறித்து டெல்லி 'எய்ம்ஸ்' மருத்துவமனையின் நாளமில்லா சுரப்பி துறை (Department of Endocrinology) தலைவரும், பேராசிரியருமான மருத்துவர் நிகில் டாண்டன் கூறுகையில், "கரோனா வைரஸ் தாக்கினால் நீரிழிவு நோயாளிகள் உயிரிழக்க 50 விழுக்காடு கூடுதல் வாய்ப்புள்ளது. உயர் ரத்த அழுத்தம், இதய நோய், புற்றுநோய், சிறுநீரக நோய்கள் உள்ளவர்களுக்கும் கரோனா வைரஸ் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதனால், அவர்கள் வழக்கமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விட உடலில் நீர்ச்சத்தை பராமரிப்பது, வீட்டிலேயே உடற்பயிற்சிகள் செய்வது போன்ற செயல்கள் மூலம் உடலை சீராக வைத்திருக்க முடியும்" என்றார்.

இதுதொடர்பாக டெல்லி மேக்ஸ் ஹெல்த்கேர் மருத்துவமனையின் நாளமில்லா சுரப்பி துறைத் தலைவர் மருத்துவர் அம்பரிஷ் மித்தல் கூறுகையில், "நீரிழிவு நோயாளிகள் தங்களது ரத்த சர்க்கரை, ரத்த அழுத்தம், கொழுப்பு (blood sugar, blood pressure,lipids) ஆகியவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது தான் முதலாவது முன்னெச்சரிக்கை நடவடிக்கை. ரத்த சர்க்கரையை அடிக்கடி பரிசோதிக்க வேண்டும். சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், இன்சுலினைப் பயன்படுத்தி உடனடியாக குறைக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

தற்போது, ​​இந்தியாவில் மட்டுமே 77 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நீரிழிவு நோயுடன் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கரோனாவின் பொருளாதார தாக்கமும்; தொழிலாளர் நலச் சட்டங்களின் தளர்வும்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.