தருமபுரியைச் சேர்ந்தவர்கள் ஸ்ரீநிவாஸ் (37), சத்தியஜோதி (27). தனியார் வங்கியில் துணை மேலாளராக ஸ்ரீநிவாஸும், அதேவங்கியில் காசாளராக சத்தியஜோதியும் பணிபுரிந்து வந்தனர்.
இந்நிலையில், இவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு பின்னர் அது காதலாக மலர்ந்தது. ஆனால், இவர்களின் காதலுக்கு உறவினர்கள் மறுப்பு தெரிவித்தனர்.
இதனிடையே, சத்தியஜோதிக்கு வேறொருவருடன் திருமணம் நிச்சயிக்கப்படவே, மனமுடைந்த காதலர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறினர்.
இதையடுத்து, கர்நாடகா தலைநகர் பெங்களூருக்கு அருகே மதனயாகன்ஹலி என்ற பகுதியில் உள்ள தனியார் விடுதியில், புதன்கிழமை இரவு தங்கினர்.
பின்னர் நேற்று காலை விடுதியின் ஊழியர் ஒருவர், அவர்கள் தங்கியிருந்த அறையைத் திறந்தபோது, இருவரும் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பெங்களூரு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதையடுத்து, காதலர்களின் உடல்கள் உடற்கூறாய்வுக்காக விக்டோரியா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன.