இமாச்சலப் பிரேசம், தர்மஷாலாவில் உள்ள புத்தமடத்தில் நாடு கடத்தப்பட்ட திபெத்தியர்கள் ஏராளமானோர் ஒன்று சேர்ந்து குரு பத்மசபவவுக்காகவும் திபெத்திய ஆன்மிகத் தலைவரான தலாய் லாமாவின் நீண்ட ஆயுளுக்காகவும் ஐந்து நாள் சிறப்பு பிரார்த்தனை ஏற்பாடு செய்து அதனை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் ஐந்தாவது நாளான நேற்று அச்சிறப்பு பிரார்த்தனை நிறைவுக்கு வந்தது. திபெத் சீனாவுடன் இணைந்ததிலிருந்து புத்த மதம் அழிந்து கொண்டிருப்பதாகக் கூறி, தலாய்லாமா நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: