டெல்லி: இந்திய ரயில்வே பாதுகாப்பு படைப்பிரிவின் தலைமை இயக்குநர் அருண்குமார், இரண்டு ஆண்டுகளுக்கான சர்வதேச ரயில்வே ஒன்றியத்தின் துணைத் தலைவராக பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, 96ஆவது யுஐசி பொதுச்சபை முடிவின் கீழ், அருண்குமார் ஜூலை 2020 முதல் ஜூலை 2022 வரை பாதுகாப்பு தளத்தின் துணைத் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்படுவார்.
அவரது பதவிக்காலம் முடிந்ததும், ஜூலை 2022 முதல் ஜூலை 2024 வரை பாதுகாப்பு தளத்தின் தலைவராக பொறுப்பேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.