பிரதமர் மோடியின் உரைகளை நாட்டின் அனைத்து மக்களுக்கும் கொண்டுபோய் சேர்ப்பதற்காக 'மான் கி பாத்' நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. இன்று நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுகையில், "சந்திராயன் - 2 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது அனைத்து இந்தியர்களுக்கும் பெருமை தரக்கூடிய செய்தி. ஆரம்பத்தில் பின்னடைவை சந்தித்தபோதிலும் நம் விஞ்ஞானிகள் சாதனை செய்துள்ளார்கள். சந்திராயன்-2 முழுவதும் இந்தியர்களால் உருவாக்கப்பட்டது. லாண்டர் விக்ரம், ரோவர் பிரக்யான் ஆகியவை செப்டம்பர் மாதம் விண்ணில் செலுத்தப்படவுள்ளது.
நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் வெள்ளம் வந்துள்ளது. இதனால் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய மத்திய அரசு, அந்தந்த மாநில அரசுகளுடன் சேர்ந்து நடவடிக்கை எடுத்துவருகிறது. காஷ்மீரில் உள்ள தொலைதூர பகுதிகளுக்கு அரசு அலவலர்கள் பாதுகாப்புடன் சென்று வருவதைப் பார்த்தால், அப்பகுதி மக்கள் வன்முறையை தவிர்த்துவிட்டு வளர்ச்சியை தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்பது தெரியவருகிறது" என்றார்.