ETV Bharat / bharat

அமித்ஷா தனிமைப்படுத்தப்பட்டாலும், ராஜஸ்தான் அரசுக்கு இன்னும் ஆபத்து நீடிக்கிறது - சாம்னா!

மும்பை: கரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு இருந்தாலும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடர்ந்து ராஜஸ்தான் மாநில அரசுக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என்று சிவசேனா குறிப்பிட்டுள்ளது.

அமித்ஷா தனிமைப்படுத்தப்பட்டாலும், ராஜஸ்தான் அரசுக்கு இன்னும் ஆபத்து நீடிக்கிறது - சாம்னா

author img

By

Published : Aug 4, 2020, 7:06 PM IST

இது தொடர்பாக அக்கட்சியின் அதிகாரப்பூர்வ இதழான சாம்னா வெளியிட்டுள்ள தலையங்கத்தில், "கரோனா பாதிப்பு காரணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் அசோக் கெலாட் இது குறித்து மிகவும் மகிழ்ச்சியடையக்கூடாது.

அமித் ஷா எங்கிருந்தாலும், அவர் தனது அரசியல் நடவடிக்கைகளை அங்கிருந்து தொடர்வார். எனவே, அசோக் கெலாட் அரசின் ஆபத்து இன்னும் நீடிக்கிறது என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும். உள்துறை அமைச்சர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தாலும், கெலாட் இன்னும் தனது எம்.எல்.ஏ.க்களை தனிமைப்படுத்த வேண்டியிருக்கிறது.

அதாவது அவரது ஆட்சிக்கு ஆபத்து இன்னும் நீடிக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தொற்று நோயிலிருந்து விரைவாக குணமடைய வேண்டும். ஆகஸ்ட் 5 ஆம் தேதி அயோத்தியில் உள்ள ராம் கோயிலின் 'பூமி பூஜை' விழாவின் போது, அவர் இருப்பு இல்லாததை நாம் உணர முடியும். மத்திய அரசு சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுபாடுகளைத் தீவிரமாக பின்பற்றியது உண்மைதான்.

ஆனால் இப்போது உள்துறை அமைச்சர் ஷா தன்னுடன் தொடர்பு கொண்ட அனைவரையும் தங்களை தனிமைப்படுத்தி, தங்களை கரோனா பரிசோதனைக்கு உட்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். உள்துறை அமைச்சர் அவ்வாறு சொன்னால் அமைச்சரவையில் உள்ள அனைத்து அமைச்சர்களும் அதனின் பொருளை உணர்ந்துக் கொள்ள வேண்டும்.

அவரை சந்தித்தவர்களிடமும், தொடர்பிலிருந்த அலுவலர்களிடமும் அமித் ஷா விடுத்த வேண்டுகோளின்படி முழு மத்திய அமைச்சரவையும் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று நாம் பரிந்துரைக்க கடமைப்பட்டிருக்கிறோம். உத்தரப்பிரதேசம் கரோனாவின் பாதிப்பை அதிகளவில் கண்ட இடமாக மாறியுள்ளது.

அங்குள்ள அயோத்தியின் நிலைமையும் அவ்வாறே உள்ளது. உத்தரப் பிரதேச அரசின் மூத்த அமைச்சர் நேற்று முன்தினம் (ஆகஸ்ட்.1) கரோனா காரணமாக உயிரிழந்தார். மேலும், மூன்று அமைச்சர்கள் மற்றும் பாஜக மாநிலத் தலைவர் ஸ்வந்திரா தேவ் சிங் ஆகியோரும் கோவிட்-19 பாதிப்பு அடைந்துள்ளனர் என நினைவில் கொள்ள வேண்டும்.

எனவே, கவனமும் பாதுகாப்பும் அவசியம். அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவது அனைவருக்கும் நினைவு கூரத்தக்க ஒரு காட்சியாக இருக்கும். அக்கட்சியின் மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி தொடங்கிய அயோத்தி ராமர் கோயிலுக்கான போராட்டத்தின் திருப்திகரமான முடிவைக் குறிக்கும் விதமாகவே, அடிக்கல் நாட்டும் பூமி பூஜை விழா அமைய உள்ளது" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.