ETV Bharat / bharat

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வுப் பேரணியை தொடங்கிவைத்த முதலமைச்சர்! - டெங்கு காய்ச்சல் தடுப்பு பேரணி

புதுச்சேரி: சுகாதாரத் துறை சார்பில் சிக்குன்குனியா, டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்த விழிப்புணர்வுப் பேரணியை முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கிவைத்தார்.

cm narayanasamy
author img

By

Published : Nov 5, 2019, 3:00 PM IST

புதுச்சேரி மாநிலத்தில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் சிக்குன் குனியா, டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்த விழிப்புணர்வுப் பேரணி புதுச்சேரி சாரம் பகுதியில் இன்று நடைபெற்றது. இந்தப் பேரணியை முதலமைச்சர் நாராயணசாமி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

டெங்கு பேரணியை தொடங்கி வைத்த நாராயணசாமி

இதில், மருத்துவக்கல்லூரி செவிலி மாணவர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் நகரின் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக வந்தனர். அப்போது, நகரப் பகுதிகளில் உள்ள குளம், நீர்நிலைகளில் டெங்கு கொசு உற்பத்தி செய்யும் கிருமிகள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்தனர்.

மேலும், ஏடிஸ் கொசுக்கள் உருவாகாமலிருக்க தேங்காய் மட்டைகளை நிமிர்த்தி நீர் தேங்காத வகையில் அடுக்கி வைக்க வேண்டும். நெகிழிக் குப்பைகளைத் தவிர்க்க வேண்டும் ஆகிய கருத்துகளை இந்த விழிப்புணர்வுப் பேரணியில் வலியுறுத்தினர்.

Intro:புதுச்சேரி சுகாதாரத்துறை சார்பில் சிக்கன் குனியா டெங்கு நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை முதல்வர் நாராயணசாமி துவக்கி வைத்தார்

Body:சிக்கன் குனியா டெங்கு நோய்களை உருவாக்கும் ஏடிஸ் கொசுக்களை உருவாகாமல் தடுக்க தேங்காய் மட்டைகளை நிமிர்த்தி வைக்காமல் நீர் தேங்காமல் அடுக்கி வைக்க வேண்டும் தேவையுள்ள தண்ணீர் பானைகளை மூடி வைப்போம் தேவையற்ற பானைகளை கவிழ்த்து வைப்போம் பிளாஸ்டிக் குப்பைகளை தவிர்ப்போம் தேவையற்ற பொருட்களை முறையாக அப்புறப்படுத்த வேண்டும் என்பதனை வலியுறுத்தி புதுச்சேரி சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் சிக்கன் குனியா டெங்கு நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி புதுச்சேரி சாரம் பகுதியில் இன்று நடைபெற்றது பேரணியை முதல்வர் நாராயணசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார் இப்பேரணியில் மருத்துவக்கல்லூரி செவிலிய மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் நகரின் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக வந்தனர் முன்னதாக அங்குள்ள கோயில் குளத்தை உள்ள நீர்களை சுகாதாரத்துறை ஊழியர்கள் டெங்கு கொசு உற்பத்தி செய்யும் கிருமிகள் உள்ளனவா என்று நீரை ஆய்வு செய்தனர் விழிப்புணர்வு பேரணியில் சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்ராஜ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Conclusion:புதுச்சேரி சுகாதாரத்துறை சார்பில் சிக்கன் குனியா டெங்கு நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை முதல்வர் நாராயணசாமி துவக்கி வைத்தார்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.