புதுச்சேரி: பஞ்சாலைகளை மூடும் முடிவை அரசு திரும்ப பெற வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று(அக்.1) நடைபெற்றது.
ஏ.எப்.டி, சுதேசி, பாரதி மூன்று பஞ்சாலைகளை மூடும் அறிவிப்பை திரும்ப பெறக்கோரியும், மூன்று பஞ்சாலைகளை தொடர்ந்து இயக்கி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க கோரியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் புதுச்சேரி பிரதேச குழு சார்பில் சுதேசி மில் முன்பாக நேற்று(அக்.1) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஜனநாயக வாலிபர் சங்க புதுச்சேரி பிரதேச தலைவர் ஆனந்த் தலைமை தாங்கினார்.
போராட்டத்தில் பஞ்சாலைகளை நவீனப்படுத்தி புதிய வேலைவாய்ப்பை உருவாக்க கோரியும், புதுச்சேரியின் பாரம்பரியமிக்க, அடையாளமான பஞ்சாலைகளை மூடும் முடிவு என்பது வேலையற்ற இளைஞர்களுக்கு எதிரான செயலாகும். அதனால் இதனை திரும்ப பெற வேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் பஞ்சாலை தொழிலாளர்கள், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் என பலர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: பிரதமர் மோடியை ராகுல் காந்தி விரட்டியடிப்பார் - கே.எஸ். அழகிரி