ETV Bharat / bharat

'ஜனநாயகத்தை வீழ்த்திய விடுதி அரசியல்' - காங்கிரஸ் விமர்சனம் - ஜனநாயகத்தை வீழ்த்திய விடுதி அரசியல்

டெல்லி: மத்தியப் பிரதேசத்தில் முதலமைச்சர் கமல்நாத் தனது பதவியை ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து, ஜனநாயகத்தை விடுதி அரசியல் வீழ்த்தியதாக காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.

Congress
Congress
author img

By

Published : Mar 20, 2020, 8:02 PM IST

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் 22 பேர் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்தனர். இதில், 16 பேரின் ராஜிநாமாவை சபாநாயகர் ஏற்றுக் கொண்டார். இதன்மூலம், கமல்நாத் அரசு பெரும்பான்மையை இழந்தது. இதனிடையே, மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தொடர்ந்த வழக்கில், சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை இன்று நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்பே, கமல்நாத் தனது முதலமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார். இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி தனது ட்விட்டர் பக்கத்தில், ஜனநாயகத்தை விடுதி அரசியல் வீழ்த்தியுள்ளதாகப் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தனது ட்விட்டர் பக்கத்தில், "மத்தியப் பிரதேசத்தில் இன்று நடைபெற்றிருப்பது ஜனநாயகப் படுகொலை. அதிகாரத்தின் மீது கொண்ட ஆசையால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை பாஜக கவிழ்த்துள்ளது. இது அக்கட்சிக்கு பழக்கமாக மாறிவிட்டது" எனப் பதிவிட்டுள்ளார்.

  • What we have witnessed today in #MadhyaPradesh is a blatant killing of Democracy in broad day light. Dismantling the democratically elected govt for the lust of power has become a habit for the BJP.

    — Ashok Gehlot (@ashokgehlot51) March 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் அவினாஷ் பாண்டே கூறுகையில், "மத்தியப் பிரதேச முதலமைச்சர் கமல்நாத் தனது பதவியை ராஜிநாமா செய்ததன் மூலம் ஜனநாயகமும் தேர்தல் முறையும் வீழ்த்தப்பட்டுள்ளது" என்றார்.

  • CM Madhya Pradesh #KamalNathResigns, and along with it dies the concept of democracy and elections.

    — Avinash Pande (@avinashpandeinc) March 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க: கமல்நாத் ராஜிநாமா, மீண்டும் ம.பி முதல்வராகும் சிவ்ராஜ் சிங் சவுகான்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.