நேற்று (செப்.05) தானியங்கி இயந்திர உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (ஏசிஎம்ஏ) 60ஆவது வருடாந்திர அமர்வில் உரையாற்றிய அவர், "உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் நம்பகமான உற்பத்தியாளர்களுக்கு பெரும் தேவை உள்ளது.
வாகன உதிரிபாக உற்பத்தித் தொழிலானது, கரோனாவுக்குப் பிந்தைய உலகில் வெற்றிகரமாக ஒன்றாக இருக்கப் போகிறது. நெருக்கடி காலத்தில்தான் தானியங்கி இயந்திர உற்பத்தியாளர்கள் நிறுவனத்திடமிருந்து சிறப்பான ஆற்றல் வெளிவருகிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் சுயசார்பு இந்தியா அழைப்பை முழு நாடும் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த உலகளாவிய விநியோகச் சங்கிலியில் நம்பகமான உற்பத்தியாளர்களுக்கு பெரும் தேவை உள்ளது.
விரைவில் உலகளாவிய ஈடுபாட்டை விரிவுபடுத்துவோம். வணிகங்களை விரிவுபடுத்துவதற்கும், உயர்தர தயாரிப்புகளை போட்டி விலையில் வழங்குவதற்கும், நம்பகமான உற்பத்தியாளர்களுக்கான பெரும் வாய்ப்புகளைக் காண்கிறோம்.
கடந்த மாதம், ரயில்வேயில் சரக்குப் போக்குவரத்து, கடந்த ஆண்டின் முதல் காலாண்டைவிட நான்கு விழுக்காடு உயர்ந்துள்ளது. நடப்பு காலாண்டில் அவை மேலும் அதிகரிக்கும்.
இரு சக்கர வாகனங்களும் மூன்றுசக்கர வாகனங்களும் மிகச் சிறந்த இழுவைத் திறனைக் கொண்டுள்ளன. எதிர்காலத்தைப் பற்றிய அவநம்பிக்கையிலிருந்து வெளியேறி, நம்பிக்கையுடன் முன்னேற இது வழிவகுக்கும்.
நாம் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கும், வாடிக்கையாளர்களுக்கு விருப்பமான உற்பத்தியாளராக மாறுவதற்கும் செலவு, சிறந்த தீர்வு ஆகியவற்றின் கூறுகளை ஆராயத் தொடங்க வேண்டும்.
தொழிற்துறை அதிக மலிவு மற்றும் கவர்ச்சிகரமான வழிகளை நோக்கிச் சென்றால், வெற்ற்றிகரமான வணிகத்திற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு” என்றார்.