என்.சி.ஆர் எனப்படும் தேசிய தலைநகர் பகுதியில் சமீப ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு காற்று மாசு மிக மோசமான நிலையை அடைந்துள்ளது. இதனால் டெல்லியைத் தொடர்ந்து காசியாபாத், நொய்டா, கிரேட்டர் நொய்டா, குர்கான் ஆகிய பகுதிகளிலும் நவம்பர் 5ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்.3) டெல்லியில் காற்று தர அளவீடு 494 ஆக இருந்ததாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்தது. இந்த அளவீடு 400க்கும் மேல் இருப்பதால் டெல்லியில் மாசு அபாயகரமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் விவாசயக் கழிவுகளை எரிப்பாதாலும் தீபாவளிப் பண்டிகையின்போது ஏற்பட்ட மாசு காரணமாகவும் காற்று மாசு மிக மோசமான நிலையில் உள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், "வட இந்தியாவில் காற்று மாசு அபாயகரமான அளவை எட்டியுள்ளது. இதைத் தடுப்பதற்காக டெல்லி அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவிட்டது. செய்யாத ஒரு தவறுக்காக டெல்லி தண்டனையை அனுபவித்துவருகிறது" என்றார்.

மேலும் இது குறித்து பேசிய பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங், விவாசயக் கழிவுகளை நிர்வகிக்க விவாசியகளுக்கு மாணியம் வழங்கவேண்டும் என்பது குறித்து இருமுறை பிரதமர் நரேந்திர மோடிக்கு வலியுறுத்தியுள்ளதாகவும் ஆனால் இது குறித்து எந்தவொரு நடவடிக்கையும் மத்திய அரசு மேற்கொள்ளவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க: டெல்லியில் மீண்டும் அமலுக்குவரும் 'ஆட்-ஈவன்' ஃபார்முலா!