ETV Bharat / bharat

'சாதி இடஒதுக்கீடு தேவை' - டெல்லி தமிழர்கள் கோரிக்கை - டெல்லி தமிழர் வாக்குகளை குறி வைக்கும் பாஜக

டெல்லி: டெல்லியில் இன்னும் ஆறு நாள்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு ஏராளமான தமிழர்கள் வசிக்கின்றனர். சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு அவர்களின் தேவையாக உள்ளது. இதுகுறித்த சிறப்பு செய்தித் தொகுப்பை இங்கு காணலாம்.

Delhi Tamil Peoples Demand Caste reservation is needed

author img

By

Published : Feb 3, 2020, 9:08 AM IST

Updated : Feb 3, 2020, 9:51 AM IST

நாட்டின் தலைநகர் டெல்லியில் வரும் 8ஆம் தேதியன்று தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இரண்டு தலைமுறைக்கு மேலாக டெல்லியில் வசிக்கும் தமிழர்கள் தங்களது சாதியை டெல்லி அரசின் சாதிப்பட்டியலில் இணைத்து அதன்மூலம் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்துள்ளனர்.

தலைநகர் டெல்லியில் சுமார் பத்து லட்சம் தமிழர்கள் வசிக்கின்றனர். குறிப்பாக நான்கு லட்சம் பேருக்கு டெல்லியில் வாக்குரிமை உள்ளது. கரோல் பாக், ராமகிருஷ்ணபுரம், திரிலோக்புரி, இந்திரபுரி, மயூர் விஹார், ஜானக்புரி, ரோஹினி உள்ளிட்டவை டெல்லியின் தமிழ் பிரதேசங்கள் என்று சொல்கிற அளவுக்கு தமிழர்கள் அதிகளவில் வசிக்கின்றனர்.

இந்த வாக்குகளைக் குறிவைத்து பாஜக, காங்கிரஸ் என இரு தேசிய கட்சிகளுமே தங்களது தமிழ்நாட்டுத் தலைவர்களை டெல்லியில் களமிறக்கியுள்ளது.

தமிழர்கள் வாக்கு

பாஜக தென்னிந்திய அணி சார்பில் தமிழர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சி டெல்லியில் உள்ள மத்திய அமைச்சர் சதானந்தா கவுடா இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. கரோனா வைரஸ் பாதிப்பு நேரத்தில் சீனாவிலிருந்து இந்தியர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுவரும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தனது நெருக்கடியான பணிகளுக்கிடையே இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு தமிழர்களிடையே பேசியதன் மூலம் டெல்லி தமிழர்களின் வாக்குகளை பாஜக எந்த அளவுக்கு குறிவைக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

Delhi Tamil Peoples Demand Caste reservation is needed
டெல்லியில் முகாமிட்டுள்ள நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள்
தமிழர்கள் மத்திய பேசிய ஜெய்சங்கர், “அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற நான், மோடி தலைமையிலான அரசு மேற்கொண்ட சீர்திருத்தங்களால் கவரப்பட்டே அமைச்சரவையில் இணைய முடிவுசெய்தேன். உலகளவில் இந்தியர்கள் என்றால் பெருமைப்படும் நிலையை மோடி உருவாக்கியுள்ளார்.
மோடியின் உழைப்புக்கு இந்திய மக்கள் 2014, 2019 தேர்தல்களில் மிகப்பெரிய அங்கீகாரம் அளித்தனர். இப்போது டெல்லி மக்களும் அப்படியே செய்வார்கள்” என்றார்.

பாஜக குறி

இக்கூட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், மாநிலத் துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்தத் தலைவர்கள் சிபி ராதாகிருஷ்ணன், பாஜக நட்சத்திர பேச்சாளர்கள் எஸ்.வி. சேகர், ராதாரவி உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். காங்கிரஸ் தரப்பில் எம்எல்ஏ விஜயதரணி, மாநில செயல்தலைவர் மயூரா ஜெயக்குமார் உள்ளிட்ட தலைவர் விரைவில் டெல்லிக்கு வந்து தமிழர்கள் பகுதியில் வாக்கு வேட்டை நடத்தவுள்ளனர்.

பாஜக ஆலோசனைக் கூட்டத்தில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பொன். ராதாகிருஷ்ணன்
“விரைவிலேயே நாங்கள் டெல்லி வந்து பரப்புரை தொடங்கவுள்ளோம். இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் டெல்லி தமிழர்கள் பலருக்கு இடம் வழங்கப்பட்டது. காங்கிரசின் சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்போம்” என்று விஜயதரணி எம்எல்ஏ நம்மிடம் கூறினார்.

மக்கள் மனநிலை

இந்தச் சூழலில் வரவிருக்கின்ற டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை தமிழர்கள் எப்படி எதிர்கொள்ளவிருக்கிறார்கள் என்று அறிந்துகொள்ள தமிழர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு விசிட் அடித்தது.

டெல்லிவாசி வழக்குரைஞர் ஆதிகேசவன்
அப்போது பெரும்பாலான தமிழர்கள் தங்களது வாழ்க்கை நிலை முன்னேற டெல்லி மாநிலத்தில் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தனர். இது தொடர்பாக பேசிய உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும், திரிலோக்புரியைச் சேர்ந்தவருமான சி. ஆதிகேசவன் கூறுகையில், “நான் இங்கே இரண்டாம் தலைமுறையாக வசித்துவருகிறேன். என்னைப் போலவே பல லட்சம் தமிழர்கள் இரண்டு, மூன்றாம் தலைமுறையாக இங்கே வசிக்கின்றனர்.

சாதி சான்றிதழ்

கடந்த காலங்களில் பொருளீட்டி அன்றாட வாழ்க்கையை நகர்த்துவதே கடும் பிரயத்தனமாக இருந்த நிலையில், தற்போதுதான் கல்வி பற்றிய விழிப்புணர்வு வந்துள்ளது. பலர் கல்லூரிகளுக்குச் சென்று படித்தாலும், அவர்களுக்கென்று இட ஒதுக்கீடு டெல்லியில் இல்லாததால், வேலைவாய்ப்பினை பெற முடியவில்லை.

டெல்லிவாழ் தமிழ் பெண்மணி பஞ்சவர்ணம்
புதிதாக அமையப்போகிற அரசு இதற்கான தீர்வினை அளிக்க வேண்டும்” என்றார். எம்.பஞ்சவர்ணம் (41) என்பவரும் இதே கோரிக்கையை வலியுறுத்தினார். “நான் 40 வருடமாக டெல்லியில் இருக்கிறேன். டெல்லியில் அடித்தட்டு தமிழர்களின் பிள்ளைகளுக்கு கல்வி என்பது சவாலாகவே உள்ளது. பள்ளிக் கல்வி முடித்தாலும், உரிய சாதி சான்றிதழ் வழங்கப்படாததால், உயர் கல்வி பெறுவதிலும், வேலைவாய்ப்பு பெறுவதிலும் தடை உள்ளது” என்றார்.

எம்ஜிஆர் ரசிகர்

திரிலோக்புரி பகுதியில் முழுக்க முழுக்க விருத்தாசலம், சின்னாளப்பட்டி, திண்டுக்கல், காரைக்குடி ஆகிய ஊர்களைப் பூர்விகமாகக் கொண்டவர்கள் 2000-த்துக்கும் அதிகமாக வசித்துவருவது குறிப்பிடத்தக்கது.

அந்தப் பகுதியில் உணவகம் நடத்திவரும் எஸ். பாப்பாத்தி (45) என்பவர் கூறும்போது, டெல்லி அரசு குடிநீர், மின்சாரக் கட்டணத்தின் மீது வழங்கிவரும் சலுகைகளை தொடர்ந்து வழங்கினால் சிறப்பாக இருக்கும் என்றார்.

வாலை இழைகள் விற்பனை செய்யும் தமிழ் பெண்மணி பாப்பாத்தி
“கடந்த இரண்டு மாதங்களாக எனக்கு தண்ணீர் கட்டணம் வரவில்லை. இதேபோல் மின்சாரக் கட்டணத்திலும் சலுகை கிடைத்துள்ளது. இது தொடர வேண்டும் என்பது எனது கோரிக்கை” என்கிறார் பாப்பாத்தி.
கரோல் பாக் பகுதியில் உள்ள தமிழ் உணவகங்களுக்கு வாழை இலைகளை 40 ஆண்டாக விற்பனை செய்துவரும் டி. மூக்கையன் (67) தீவிர எம்ஜிஆர் ரசிகராக உள்ளார். தேர்தலைப் பற்றி பேசிய அவர், ”70-களின் மத்தியில் எம்ஜிஆர் தமிழ்நாடு அரசியலில் உச்சத்தில் இருந்த நேரத்தில் நான் டெல்லி வந்தேன். அப்போது அதிமுக மீது பெரிய ஈர்ப்பு இருந்தது.

விருப்பம்

அதற்கு காரணம் எம்ஜிஆர் டெல்லியில் இருந்தாலும், எம்ஜிஆர், இரட்டை இலை பொறித்த படங்கள் எனது கடையில் இடம்பெற்றிருக்கும். ஆனால் கட்சியின் நிலை இப்போது வேறாகிவிட்டது” என்று கூறியவர் டெல்லி அரசியலுக்குத் திரும்பினார்.

டெல்லி தமிழ் பெண்மணி
“டெல்லியில் தற்போது கெஜ்ரிவாலுக்கு நல்ல பெயர் உள்ளது. ஆனால், இந்த முறை அவர் வெற்றிபெற்றால் அவர் வழங்கிவரும், குடிநீர் கட்டண சலுகை, மின்சாரக் கட்டண சலுகை, இலவச பேருது பயண திட்டம் போன்றவை ரத்துசெய்யப்படும் என்று எதிர்க்கட்சிகள் கூறிவருவது அச்சமடையவைக்கிறது. அரவிந்த் கெஜ்ரிவால், ஒருவேளை மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அப்படி செய்யக்கூடாது” என்கிறார்.

Intro:Body:

சாதியை பதிவு செய்து இட ஒதுக்கீட்டுக்கு வழிவகை செய்ய வேண்டும்: தேர்தலையொட்டி டெல்லி தமிழர்கள் கோரிக்கை

சிறப்பு செய்தி: வீடியோ , புகைப்படங்கள் உள்ளன.

எம்.மணிகண்டன்

பிப்ரவரி 2, 2020:

புது டெல்லி:

இந்திய தலைநகர் புது டெல்லியில் வரும் பிப்ரவரி 8-ம் தேதியன்று தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இரண்டு தலைமுறைக்கு மேலாக டெல்லியில் வசிக்கும் தமிழர்கள் தங்களது சாதிக்களை டெல்லி அரசின் சாதிப்பட்டியலில் இணைத்து அதன் மூலம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைநகர் டெல்லியில் சுமார் 10 லட்சம் தமிழர்கள் வசிக்கின்றனர். குறிப்பாக 4 லட்சம் பேருக்கு டெல்லில் வாக்குரிமை உள்ளது. கரோல் பாக், ராமகிருஷ்ணபுரம், திரிலோக்புரி, இந்திரபுரி, மயூர் விஹார், ஜானக்புரி மற்றும் ரோஹினி உள்ளிட்டவை டெல்லியின் தமிழ் பிரதேசங்கள் என்று சொல்கிற அளவுக்கு தமிழர்கள் அதிகளவில் வசிக்கின்றனர். இந்த ஓட்டுக்களை குறிவைத்து பாஜக மற்றும் காங்கிரஸ் என இரு தேசிய கட்சிகளுமே தங்களது தமிழக தலைவர்களை டெல்லியில் களமிறக்கியுள்ளது.

பாஜக தென்னிந்திய அணி சார்பில் தமிழர்களை சந்திக்கும் நிகழ்ச்சி டெல்லியில் உள்ள மத்திய அமைச்சர் சதானந்தா கவுடா இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. கரோனா வைரஸ் பாதிப்பு நேரத்தில் சீனாவிலிருந்து இந்தியர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வரும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், தனது நெருக்கடியான பணிகளுக்கிடையே இந்தக்கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழர்களிடையே பேசியதன் மூலம் டெல்லி தமிழர்களின் வாக்குகளை பாஜக  எந்த அளவுக்கு குறி வைக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

தமிழர்கள் மத்திய பேசிய ஜெய்ஷங்கர், “அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெற்ற நான், மோடி தலைமையிலான அரசு மேற்கொண்ட சீர்திருத்தங்களால் கவரப்பட்டே அமைச்சரவையில் இணைய முடிவு செய்தேன். உலகளவில் இந்தியர்கள் என்றால் பெருமைப்படும் நிலையை மோடி உருவாக்கியுள்ளார். மோடியின் உழைப்புக்கு இந்திய மக்கள் 2014 மற்றும் 2019 தேர்தல்களில் மிகப்பெரிய அங்கீகாரம் அளித்தனர். இப்போது டெல்லி மக்களும் அப்படியே செய்வார்கள்,” என்றார்.

இக்கூட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலை சிபி ராதாகிருஷ்ணன், பாஜக நட்சத்திர பேச்சாளர்கள் எஸ்.வி.சேகர் மற்றும் ராதாரவி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் தரப்பில் எம்.எல்.ஏ விஜயதரணி, மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் உள்ளிட்ட தலைவர் விரைவில் டெல்லிக்கு வந்து தமிழர்கள் பகுதியில் ஓட்டு வேட்டை நடத்தவுள்ளனர்.

“விரைவிலேயே நாங்கள் டெல்லி வந்து பிரச்சாரம் தொடங்கவுள்ளோம். இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் டெல்லி தமிழர்கள் பலருக்கு இடம் வழங்கப்பட்டது.காங்கிரஸின் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்போம்,” என்று விஜயதரணி எம்.எல்.ஏ நம்மிடம் கூறினார்.

இந்த சூழலில் வரவிருக்கின்ற டெல்லி சட்டமன்ற தேர்தலை தமிழர்கள் எப்படி எதிர்கொள்ளவிருக்கிறார்கள் என்று அறிந்து கொள்ள தமிழர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு ஈடிவி பாரத் தமிழ்நாடு விசிட் அடித்தது.

அப்போது பெரும்பாலான தமிழர்கள் தங்களது வாழ்க்கை நிலை முன்னேற டெல்லி மாநிலத்தில் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பாக பேசிய உச்சநீதிமன்ற வழக்கறிஞரும், திரிலோக்புரியைச் சேர்தவருமான சி.ஆதிகேசவன் கூறுகையில், “நான் இங்கே 2-ம் தலைமுறையாக வசித்து வருகிறேன். என்னை போலவே பல லட்சம் தமிழர்கள் 2 மற்றும் 3-ம் தலைமுறையாக இங்கே வசிக்கின்றனர். கடந்த காலங்களில் பொருளீட்டி அன்றாட வாழ்க்கையை நகர்த்துவதே கடும் பிரயத்தனமாக இருந்த நிலையில், தற்போது தான் கல்வி பற்றிய விழிப்புணர்வு வந்துள்ளது. பலர் கல்லூரிகளுக்கு சென்று படித்தாலும், அவர்களுக்கென்று இட ஒதுக்கீடு டெல்லியில் இல்லாத்தால், வேலைவாய்ப்பினை பெற முடியவில்லை. புதிதாக அமையப்போகிற அரசு இதற்கான தீர்வினை அளிக்க வேண்டும்,” என்றார்.

எம்.பஞ்சவர்ணம்(41) என்பவரும் இதே கோரிக்கையை வலியுறுத்தினார்.

“நான் 40 வருடமாக டெல்லியில் இருக்கிறேன். டெல்லியில் அடித்தட்டு தமிழர்களின் பிள்ளைகளுக்கு கல்வி என்பது சவாலாகவே உள்ளது. பள்ளி கல்வி முடித்தாலும், உரிய சாதி சான்றிதழ் வழங்கப்படாத்தால், உயர் கல்வி பெறுவதிலும், வேலைவாய்ப்பு பெறுவதிலும் தடை உள்ளது,” என்றார்.

திரிலோக்புரி பகுதியில் முழுக்க முழுக்க விருத்தாச்சலம், சின்னாளப்பட்டி, திண்டுக்கல், காரைக்குடி ஆகிய ஊர்களை பூர்விகமாக கொண்டவர்கள் 2000-த்துக்கும் அதிகமாக வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அந்தப்பகுதியில் உணவகம் நடத்தி வரும் எஸ்.பாப்பாத்தி (45) என்பவர் கூறும் போது, டெல்லி அரசு குடிநீர் மற்றும் மின்சாரக்கட்டணத்தின் மீது வழங்கி வரும் சலுகைகளை தொடர்ந்து வழங்கினால் சிறப்பாக இருக்கும் என்றார்.

“கடந்த 2 மாதங்களாக எனக்கு தண்ணீர் கட்டணம் வரவில்லை. இதே போல் மின்சார கட்டணத்திலும் சலுகை கிடைத்துள்ளது. இது தொடரவேண்டும் என்பது எனது கோரிக்கை,” என்கிறார் பாப்பாத்தி.

கரோல் பாக் பகுதியில் உள்ள தமிழ் உணவகங்களுக்கு வாழை இலைகளை  40 வருடமாக விற்பனை செய்து வரும் டி.மூக்கையன் (67) தீவிர எம்.ஜி.ஆர் ரசிகராக உள்ளார். தேர்தலை பற்றி பேசிய அவர், ” 70-களின் மத்தியில் எம்.ஜி.ஆர் தமிழக அரசியலில் உச்சத்தில் இருந்த நேரத்தில் நான் டெல்லி வந்தேன். அப்போது அதிமுக மீது பெரிய ஈர்ப்பு இருந்தது. அதற்கு காரணம் எம்.ஜி.ஆர். டெல்லியில் இருந்தாலும், எம்.ஜி.ஆர், இரட்டை இலை பொறித்த படங்கள் எனது கடையில் இடம்பெற்றிருக்கும். ஆனால் கட்சியின் நிலை இப்போது வேறாகிவிட்டது,” என்று கூறியவர் டெல்லி அரசியலுக்கு திரும்பினார்.

“டெல்லியில் தற்போது கேஜ்ரிவாலுக்கு நல்ல பெயர் உள்ளது. ஆனால், இந்த முறை அவர் வெற்றி பெற்றால் அவர் வழங்கி வரும், குடிநீர் கட்டண சலுகை, மின்சார கட்டண சலுகை, இலவச பேருது பயண திட்டம் போன்றவை ரத்து செய்யப்படும் என்று எதிர்க்கட்சிகள் கூறிவருவது அச்சமடைய வைக்கிறது. அரவிந்த் கேஜ்ரிவால், ஒருவேளை மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அப்படி செய்யக்கூடாது,” என்கிறார்.

Conclusion:
Last Updated : Feb 3, 2020, 9:51 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.