ETV Bharat / bharat

நச்சுவாயு தாக்கி ஒப்பந்த ஊழியர்கள் இருவர் பலி! - டெல்லி

டெல்லி: பாக்யா விஹார் பகுதியில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு ஒப்பந்த ஊழியர்கள் நச்சு வாயு தாக்கி உயிரிழந்தனர். மேலும், மூன்று பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

septic-dank-two-labours-died
author img

By

Published : May 8, 2019, 12:48 PM IST

டெல்லியில் பாக்யா விஹார் பகுதியில் பிரேம் நகரில் குலாம் முஸ்தாபா என்பவர், சொந்தமாக வீடு கட்டும் பணியை கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியுள்ளார். இந்நிலையில், நேற்று (மே 7) வீட்டின் அருகில் 10 அடி ஆழமுள்ள செப்டிக்டேங் கழிவு நீர்த் தொட்டியை சுத்தம் செய்ய, ரம்பீர் என்பவரிடம் ஆட்கள் வேண்டுமென கேட்டுள்ளார். அதன்படி நேற்று நண்பகல் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்ய அங்கே ஐந்து பேர் வந்துள்ளனர்.

அவர்களில் இரண்டு பேருக்கு இதில் முன் அனுபவம் இல்லை எனக் கூறியும், வற்புறுத்தி இதைச் செய்ய வேண்டும். இல்லையெனில் மூன்று நாட்கள் சம்பளம் கிடையாது என மிரட்டி அவர்களை சுத்தம்செய்யும்படி ரம்பீர் அவர்களை உள்ளே அனுப்பிவைத்துள்ளார். அவர்களுடன் ரம்பீர் மற்றும் மேலும் இரண்டு பேர் உள்ளே சென்றுள்ளனர்.

இந்நிலையில், முதலில் உள்ளே சென்ற இரு ஊழியர்கள் நச்சு வாயு தாக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்தனர். அவர்களுடன் சென்ற ரம்பீரும் மற்ற இருவரும் மூச்சுத் திணறலால் மயக்கமாகினர். உள்ளே சென்று நீண்ட நேரமாகியும், யாரும் வெளியே வராததால் சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், அவர்கள் ஐந்து பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதில் சிகிச்சை பலனின்றி தீபக் லம்பூ(30), கணேஷ் சஹா(35) இருவரும் உயிரிழந்தனர். ரம்பீர்(33), ஷேர் சிங்(40), பப்லு(40) ஆகியோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் இவர்களது நிலைமை மோசமாக உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

காவல் துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மேலும், இந்த வழக்கு குறித்து டிசிபி எஸ்.டி.மிஸ்ரா கூறுகையில், 'குற்றப்பிரிவு மற்றும் தடவியல் குழு சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது பாதுகாப்பு உடையை அணிந்திருந்தனர். இறந்தவர்களின் உடல்கள் உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது' என அவர் தெரிவித்தார்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.