நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இதனால் தோல்விக்குப் பொறுப்பேற்று கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி அறிவித்தார். இதற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் சமாதானம் செய்த போதிலும், தான் ராஜினாமா செய்வதில் பிடிவாதமாக ராகுல் காந்தி இருப்பதாகத் தகவல் வெளியானது.
இந்நிலையில் ராகுல் காந்தி காங்கிரஸ் பொறுப்பில் நீடிக்க வேண்டும். ராஜினாமா செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை ராகுல் காந்தி மாற்ற வேண்டும் என்று டெல்லி பிரதேஷ் காங்கிரஸ் கமிட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.