டெல்லி பாஜக தலைவர் நந்த் கிஷோர் கார்க், வழக்குரைஞர் சஷாங்க் தியோ மூலமாகப் பொதுநல மனுவொன்றை டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று (மார்ச்3) தாக்கல்செய்தார். அந்த பொதுநல மனுவில், “டெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்ட மக்களுக்க இழப்பீடு வழங்குவதற்கு முன்னர், கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிய வேண்டும்.
அதன் பின்னர் அரசு இழப்பீடு தொடர்பான அறிவிப்பை வெளியிட வேண்டும். இது குறித்து டெல்லி அரசுக்கு முழுமையான வழிகாட்டுதலை அறிவிக்க வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்தார். டெல்லி வகுப்புவாத கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த வாரம் நிதியுதவி அறிவித்தார்.
அதில், வடகிழக்கு டெல்லி வகுப்புவாத கலவரத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம், இறந்த சிறார்களின் குடும்பங்களுக்கு தலா ரூ .5 லட்சம், டெல்லியில் வீடுகள் எரிக்கப்பட்டவர்களுக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்குவதாகத் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: நக்சலைட்டுகளின் கனவை பொசுக்கிய பெண்கள்!