கரோனா வைரசின் தாக்கத்தால் அனைத்து அமைப்புகளும் முடங்கிப் போயுள்ளன. அரசு அமைப்புகள், தனியார் அமைப்புகள் என அனைத்தும் மார்ச் 31ஆம் தேதிவரை தங்களது சேவைகளை நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளன. நீதிமன்றங்களும் தங்களது செயல்பாடுகளை நிறுத்தப்போவதாகக் கூறிவருகின்றன.
அந்த வகையில், டெல்லி உயர் நீதிமன்றம் தன்னுடைய அனைத்துச் செயல்பாடுகளையும், மாவட்ட நீதிமன்றங்களின் செயல்பாடுகளையும் ஏப்ரல் 4ஆம் தேதிவரை நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளது.
மிக முக்கியமான அவசர வழக்குகளை காணொலி மூலம் விசாரிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. தற்போது நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்களில் வழக்குரைஞர்கள் யாரும் முன்னிலையாக தடைவிதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: ஏழை மக்களுக்கு உணவளிக்க ரூ.20 கோடி ஒதுக்கீடு!