வினி இரும்பு மற்றும் ஸ்டீல் உத்யோக் லிமிடட் நிறுவனத்திற்கு ஜார்க்கண்ட் மாநிலம் ராஜரா பகுதியில் அமைந்துள்ள நிலக்கரி சுரங்கத்தை ஒதுக்கீடு செய்ததில் ஊழல் நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. 2006ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை அம்மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த மது கோடா உட்பட பலர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், கோடா குற்றம் இழைத்துள்ளார் என நீதிபதி தெரிவித்தார். 2017ஆம் ஆண்டு, அவருக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
தேர்தலில் போட்டியிடுவதற்காக தண்டனையை ரத்துசெய்யக் கோரி கோடா டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி விபு பக்ரூ, குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கோடாவின் தண்டனைக்குத் தடை விதிக்க முடியாது எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்தார்.
இதையும் படிங்க: திருப்பதி தேவஸ்தானத்தின் சொத்துகள் ஏலம்