ETV Bharat / bharat

முதியவர்களுக்காக வீட்டின் வாசல் வரை செல்லும் மருத்துவ சேவை: டெல்லி அரசுக்கு குவியும் பாராட்டுகள்! - Delhi government to provide medical service

டெல்லி: முதியவர்களின் நலனை கருத்தில் கொண்டு வீட்டுக்கே சென்று மருத்துவ சேவை வழங்கும் நோக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளது.

டெல்லி
டெல்லி
author img

By

Published : Oct 20, 2020, 1:59 PM IST

இந்தியாவில் கரோனா வைரஸ் தாக்கம் நாட்டின் மற்ற பகுதிகளில் குறைந்துவரும் நிலையில், டெல்லியில் அதன் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. முதியோர்கள், குழந்தைகள் ஆகியோர் கரோனாவால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதால் அவர்களுக்கென தனித்துவமான திட்டத்தை வகுக்கு டெல்லி அரசு திட்டமிட்டுவந்தது.

அதன் விளைவாக, முதியவர்களுக்கு வீட்டுக்கே சென்று மருத்துவ சேவை வழங்கப்படவுள்ளது. முதியவர்கள் வீட்டுக்கு மனநல ஆலோசகர்கள், மருத்துவர்கள், சட்ட ஆலோசகர்கள் ஆகியோர் சென்று சேவை அளிக்கும் விதமாக மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், 60 ஆயிரம் முதியவர்கள் பயன்பெறவுள்ளனர். 1800111323 என்ற உதவி எண் மூலம் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ சேவை மட்டுமின்றி தொழில்நுட்ப பயிற்சி, சதுரங்கம், கேரம் போன்ற விளையாட்டு பயிற்சியும் இச்சேவையின் கீழ் வழங்கப்படவுள்ளது. அரசு சாரா அமைப்புகளின் உதவியோடு இத்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 500 சேவை மையங்கள் அமைக்கப்படவுள்ளது. டெல்லி அரசின் இந்த முயற்சியினை பல்வேறு தரப்பினர் வெகுவாக பாராட்டிவருகின்றனர்.

இதையும் படிங்க: டெல்லியில் குறையும் காற்று மாசு! காரணம் என்ன?

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.