ETV Bharat / bharat

மொல்லெம் கிராமம்: டெல்லி முதலமைச்சர் Vs கோவா முதலமைச்சர்

author img

By

Published : Nov 12, 2020, 7:03 PM IST

பனாஜி: தென்மேற்கு ரயில்வேயின் பாதையை இரட்டிப்பாக்கும் திட்டம் தொடர்பான டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கருத்தை கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் கடுமையாக விமர்சித்திருப்பது சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மொல்லெம் கிராமம் : டெல்லி முதலமைச்சர் Vs கோவா முதலமைச்சர்

தெற்கு கோவாவில் அமைந்துள்ள மொல்லெம் கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதியில் தென்மேற்கு ரயில்வேயின் போக்குவரத்துப் பாதையை இரட்டிப்பாக்கும் திட்டத்திற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இத்திட்டப்பணிகளை எதிர்த்து மொல்லெம் கிராம மக்கள் கடுமையாகப் போராடிவருகின்றனர்.

இந்நிலையில் போராடும் மக்களுக்கு ஆதரவாக டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

அதில், "கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் அவர்களே! மக்களின் குரலுக்குச் செவிமடுங்கள். தயவுசெய்து அவர்களின் குரலைக் கேட்டு, கோவாவின் நுரையீரல் போன்றிருக்கும் மொல்லெம் நிலத்தைக் காப்பாற்றுங்கள். கோவா மீது இந்தத் திட்டத்தை மத்திய அரசு கட்டாயப்படுத்துகிறது என்பதை நான் புரிந்துகொள்கிறேன்.

தயவுசெய்து கோவா மக்களுடன் நீங்கள் நில்லுங்கள். கோவாவை நிலக்கரி மையமாக மாற்றும் மத்திய அரசிடமிருந்து மக்களைக் காப்பாற்றுங்கள்” என வேண்டுகோள்விடுத்திருந்தார்.

அதற்குப் பதிலளித்த கோவா முதலமைச்சர் சாவந்த், "அன்புள்ள அர்விந்த் கெஜ்ரிவால் ஜி, ரயில் தடங்களை இரட்டிப்பாக்குவது ஒரு தேசத்தைக் கட்டமைக்கும் பயிற்சியாகும். இந்தத் திட்டத்தால் மொல்லெமுக்கு எந்த அச்சுறுத்தலோ ஆபத்தோ ஏற்படாது. அதை நாங்கள் உறுதிசெய்வோம். கோவாவை நிலக்கரி மையமாக மாற்ற நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

மத்திய அரசு Vs மாநில அரசு என்ற நிலையை உருவாக்குவதில் நீங்கள் பெற்றுள்ள நிபுணத்துவத்தை நாங்கள் அறிந்து வைத்திருக்கிறோம். மாநில பிரச்னைகளை நாங்கள் பார்த்துக்கொள்வோம். உங்கள் ஆலோசனையை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். மிகவும் மாசுபட்ட நகரங்களில் ஒன்றாக இருக்கும் டெல்லியில் மாசுபாட்டைக் கையாளுவதில் கெஜ்ரிவால் கவனம் செலுத்த வேண்டும்” என்று பதிலளித்தார்.

ஆளும் பாஜக உறுப்பினர்களுக்கும் சுற்றுச்சூழல் பிரச்னைகள் தொடர்பாக தொடர்ந்து குரல் எழுப்பி ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையே கோவாவில் நிலவிவரும் சண்டை தற்போது ட்விட்டர் சமூக தளத்தில் பரிணாமம் பெற்றுள்ளது.

தென்மேற்கு ரயில்வேயின் பாதையை இரட்டிப்பாக்க, கர்நாடகாவின் காஸில் ராக் ரயில் நிலையத்திலிருந்து கோவாவின் டினை காட் நிலையம் வரை மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, தெற்கு கோவாவில் அமைந்துள்ள மொல்லெம் கிராமத்தைச் சுற்றியுள்ள காடுகளிலிருந்து கிட்டத்தட்ட 50 ஆயிரம் மரங்களை வெட்டு, அந்தப் பகுதியை நிலக்கரி சேமிப்புத் தளமாக்க அரசு முடிவெடுத்துள்ளது.

இதற்கு எதிர்க்கட்சிகள், சிவில் சமூக குழுக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.