தலைநகர் டெல்லியின் சத்தர்பூர் பகுதியில் வசிக்கும் குடும்பம் ஒன்று அன்றாட வருமானத்தை மட்டுமே நம்பி உள்ளது.
இந்நிலையில் நாட்டில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளதால் அவர்களுக்கு சரியான உணவு கிடைக்கவில்லை.
இதனால் அந்தக் குடும்பம் பசியால் வாடியது. இதனை ஈடிவி பாரத் வெளிக்கொணர்ந்தது. இதையடுத்து அக்குடும்பத்துக்கு அமைப்பு ஒன்று உணவு வழங்கி உதவி செய்தது.
கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாட்டில் 21 நாட்களுக்கு மக்கள் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது அடுத்த மாதம் (ஏப்ரல்) 14ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.
நாட்டில் கரோனா பாதிப்பு 600ஐ தாண்டிவிட்டது. உயிரிழப்பு 16 ஆக உள்ளது. உலகம் முழுக்க கரோனா பாதிப்புக்கு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பாதிப்பு ஐந்து லட்சத்தை தாண்டி விட்டது.