டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பெருவாரியான தொகுதிகளில் முன்னிலை வகித்துவரும் ஆம் ஆத்மி கட்சி வெற்றி முகப்பில் உள்ளது.
இதனையொட்டி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ட்விட்டரில் பதிவிட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், "அருதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் டெல்லியில் ஆட்சி அமைக்கவுள்ள அரவிந்த் கேஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
மத அரசியலை வளர்ச்சி வென்றுவிடும் என்பதே இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. நாட்டின் நலனை கருத்தில் கொண்டு பிராந்திய உரிமை, விருப்பங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்" எனக் கூறியுள்ளார்.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசுகையில், "அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துவிட்டேன். பாஜகவை மக்கள் புறக்கணித்துவிட்டனர். வளர்ச்சி மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும், சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் போன்றவை நிராகரிக்கப்படும்" என்றார்.
இதுபோன்று, "அரவிந்த் கேஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி, பாஜகவின் வெறுப்பு, வன்முறை அரசியலுக்கு தக்க பதிலடி கொடுத்த டெல்லி மக்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்" என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சிதாராம் எச்சூரி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : சிஏஏவை எதிர்த்து பேரவையில் தீர்மானம் - பேரவைச் செயலரிடம் திமுக நினைவூட்டல் கடிதம்