ETV Bharat / bharat

ஹெலிகாப்டர் பேர ஊழல் : மைக்கேலிடம் விசாரணை மேற்கொள்ளும் அமலாக்கத் துறை!

டெல்லி : ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேலிடம் விசாரணையை மேற்கொள்ள அமலாக்க இயக்குநரகத்திற்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ஹெலிகாப்டர் பேர ஊழல் : மைக்கேலிடம் விசாரணை மேற்கொள்ளும் அமலாக்கத் துறை!
ஹெலிகாப்டர் பேர ஊழல் : மைக்கேலிடம் விசாரணை மேற்கொள்ளும் அமலாக்கத் துறை!
author img

By

Published : May 24, 2020, 3:56 PM IST

குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பயணிப்பதற்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்கள் வாங்க 2010ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதி அன்று அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்துகொண்டது

556.262 மில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள 12 ஹெலிகாப்டர்கள் வாங்க ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் மூலம் 398.21 மில்லியன் யூரோக்கள் ( ஏறத்தாழ 2,666 கோடி ரூபாய்) இழப்பு அரசுக்கு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. இதனையடுத்து, இந்த விவகாரம் குறித்து வழக்குப் பதிவு செய்த சிபிஐ விசாரணையைத் தொடங்கியது.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த விமானப்படை முன்னாள் தளபதி தியாகி, அவரது உறவினர் சஞ்சீவ், ராஜீவ் ஷாம்செர் பகதூர் சக்சேனா உள்ளிட்டோரை சிபிஐ கைது செய்தது. இதன் தொடர்ச்சியாக, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தம் 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ரத்து செய்யப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தின் இந்திய தலைவர் பீட்டர் ஹுலெட்டிடம் 450 கோடி ரூபாய் லஞ்சம் பெற்று இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல் 2018ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி அன்று துபாயில் அமலாக்க இயக்குநரக அலுவலர்களால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் காரணமாக அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்ற சூழலில் குற்றஞ்சாட்டப்பட்ட கிறிஸ்டியன் மைக்கேலிடம் அமலாக்க அலுவலர்கள் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டுமென டெல்லி நீதிமன்றத்தில் கோரியிருந்தனர். மனுவை இன்று விசாரித்த சிறப்பு நீதிபதி புலஸ்திய பிரமாச்சலா, சிறை வளாகத்தில் மே 25, 26 ஆகிய தேதிகளில் மைக்கேலிடம் விசாரணையை மேற்கொள்ள அனுமதி வழங்கினார்.

Delhi court allows ED to interrogate Christian Michel
ஹெலிகாப்டர் பேர ஊழல் : மைக்கேலிடம் விசாரணை மேற்கொள்ளும் அமலாக்கத் துறை!

ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் மத்திய புலனாய்வு பிரிவின் (சிபிஐ) விசாரணை வளையத்திற்குள் கைடோ ஹாஷ்கே, கார்லோ ஜெரோசா ஆகிய இரண்டு இடைத்தரகர்களும் உள்ளது கவனிக்கத்தக்கது.

இதையும் படிங்க : அரசு துறைகள் தனியார்மயம்: சுகாதாரத் துறை ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.