நாட்டில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக வெளிமாநில தொழிலாளர்கள் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டுவருகின்றனர். குறிப்பாக டெல்லியில் அவர்களின் பிரச்னை மிகப் பெரியதாக உருவெடுத்துள்ளது.
இந்நிலையில், டெல்லி காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் அனில் சவுத்ரியை காவல் துறையினர் டெல்லியிலுள்ள அவரது வீட்டில் தடுப்புக் காவலில் வைத்துள்ளனர்.
இது குறித்து டெல்லி காவல் துறை வட்டாரங்கள் கூறுகையில், "நேற்றும் இன்றும் பல வெளிமாநிலத் தொழிலாளர்களைத் தகுந்த இடைவெளி பின்பற்றாமல் அவர்(அனில்) டெல்லி - உத்தரப் பிரதேச எல்லைக்கு அழைத்துச் சென்றார். இது பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும்" என்கின்றன.
முன்னதாக நடந்து செல்லும் வெளிமாநிலத் தொழிலாளர்களை ராகுல் காந்தி நேரில் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ராகுல் காந்தியிடம் பேசிய வெளிமாநில தொழிலாளர்கள் கைது