புதிதாக நிறைவேற்றப்பட்ட வேளாண் திருத்தச் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்திவருகின்றனர். எதிர்க்கட்சி தலைவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிங்கு எல்லைப்பகுதியில் விவசாயிகளைச் சந்தித்துப் பேசினார்.
விவசாயிகளை சந்தித்ததற்காக டெல்லி காவல் துறை அவரை வீட்டுக்காவலில் வைத்துள்ளதாக ஆம் ஆத்மி குற்றஞ்சாட்டியுள்ளது. அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள காவல் துறை, தகுந்த ஆதாரங்களின்றி பொய்கள் பரப்பப்படுவதாக விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து வடக்கு டெல்லி துணை காவல் ஆணையரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டு காவலில் அடைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் பொய்யானது. சட்டத்திற்கு உட்பட்டு அவர் சென்றுள்ளார். அவர் வீட்டின் வெளியே எடுக்கப்பட்ட புகைப்படம் அதற்கு சான்று" என குறிப்பிடப்பட்டுள்ளது.
-
Important :
— AAP (@AamAadmiParty) December 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
BJP's Delhi Police has put Hon'ble CM Shri @ArvindKejriwal under house arrest ever since he visited farmers at Singhu Border yesterday
No one has been permitted to leave or enter his residence#आज_भारत_बंद_है#BJPHouseArrestsKejriwal
">Important :
— AAP (@AamAadmiParty) December 8, 2020
BJP's Delhi Police has put Hon'ble CM Shri @ArvindKejriwal under house arrest ever since he visited farmers at Singhu Border yesterday
No one has been permitted to leave or enter his residence#आज_भारत_बंद_है#BJPHouseArrestsKejriwalImportant :
— AAP (@AamAadmiParty) December 8, 2020
BJP's Delhi Police has put Hon'ble CM Shri @ArvindKejriwal under house arrest ever since he visited farmers at Singhu Border yesterday
No one has been permitted to leave or enter his residence#आज_भारत_बंद_है#BJPHouseArrestsKejriwal
இதுகுறித்து டெல்லி துணை காவல் ஆணையர் அன்டோ அல்போன்ஸ் கூறுகையில், "தகுந்த ஆதாரங்களின்றி பொய்கள் பரப்பப்படுகிறது. எச்சரிக்கையாக உள்ளோம். நேற்று இரவு 8 மணிக்கு வீட்டை வெளியே சென்ற அவர் 10 மணிக்கு திரும்பியுள்ளார். இதில் எந்த பிரச்னையும் இல்லை" என்றார்.