கோவிட்-19 தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. ஏற்கனவே, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தார். இந்நிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தொண்டை வலியாலும் காய்ச்சலாலும் அவதிப்பட்டு வருகிறார் என்று தெரிகிறது. கரோனா பாதிப்பு இருக்குமோ என்ற அச்சம் எழுந்த நிலையில், தன்னைத் தானே அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, கெஜ்ரிவாலுக்கு நாளை கரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. இதுகுறித்து டெல்லி அரசின் மூத்த அலுவலர் ஒருவர் கூறுகையில், "கெஜ்ரிவால் ஜூன் 7ஆம் தேதி முதல் தொண்டை வலியாலும் காய்ச்சலாலும் அவதிப்பட்டுவருகிறார். மருத்துவர்களின் ஆலோசனைபடி நாளை அவர் கரோனா பரிசோதனை மேற்கொள்கிறார்" என்றார்.
ஜூன் 7ஆம் தேதி காலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்கு பிறகு அவர் எதிலும் கலந்து கொள்ளவில்லை. கடந்த இரண்டு மாதங்களாக, பெரும்பாலான சந்திப்புகளை அவர் வீடியோ கான்பரன்சிங் மூலமே மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டெல்லி அரசின் உத்தரவு தீவினையானது - மாயாவதி