ETV Bharat / bharat

டெல்லி சபாநாயகரின் உதவியாளர் உள்பட நான்கு பேருக்கு கரோனா!

author img

By

Published : Jun 6, 2020, 4:07 AM IST

டெல்லி சபாநாயகரின் தனி உதவியாளர் உள்பட நான்கு சட்டப்பேரவை ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

Delhi Assembly Speaker's Secretary tested positive 3 staffers test COVID-19 positive Secretary of Delhi Assembly Speaker positive டெல்லி சட்டப்பேரவை சபநாயகர் கரோனா டெல்லி ராம்நிவாஸ் கோயல் டெல்லி கரோனா எண்ணிக்கை
டெல்லி சட்டப்பேரவை சபநாயகரின் உதவியாளருக்கு கரோனா

இது தொடர்பாக ஊடகங்களில் பேசிய டெல்லி சபாநாயகர் ராம்நிவாஸ் கோயல், “கடந்த வாரம் எனது உதவியாளருக்கு உடல்நலை சரியில்லாமல் போனது. இதைத்தொடர்ந்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்படது. சபநாயகர் பகுதி தனிமைப்படுத்தப்பட்டு 26 ஊழியர்களின் சளி, ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைக்காக அனுப்பப்பட்டது.

அதன் சோதனை முடிவுகளில், மேலும் மூவருக்கு கரோனா தொற்று உறுதியானது. எனக்கு கரோனா தொற்று இல்லையென முடிவு வந்துள்ளது. திங்கள் முதல் அலுவலகம் திறக்கப்படும்" என்றார்.

இதனிடையே அந்த அலுவலகத்திலிருந்த எட்டு பேருக்கு இதுவரை கரோனா தொற்று உறுதியாகியுள்ளது என அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெல்லியிலுள்ள அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வேகமாக தொற்று பரவிவருவது அரசு ஊழியர்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மேனகா காந்தியின் இணையதளம் முடக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.