ETV Bharat / bharat

டெல்லி அரியாசனம் யாருக்கு? மல்லுக்கட்டும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ்

டெல்லி : டெல்லி சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கிறது. அங்கு ஆட்சி அரியாசனத்தை பிடிக்க ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

மும்முனை போட்டியில் டெல்லி சட்ட மன்ற தேர்தல்

author img

By

Published : Feb 8, 2020, 8:01 AM IST

டெல்லி மாநிலத்தை ஆளும் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசாங்கத்தின் ஆட்சிக்காலம் வருகிற 22ஆம் தேதியோடு நிறைவுப்பெறுகிறது.

இதையடுத்து டெல்லியில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று தேர்தல் வாக்குப்பதிவு நடக்கிறது. முடிவுகள் 11ஆம் தேதி அறிவிக்கப்படுகின்றன.

இந்நிலையில் டெல்லியில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, பாஜக ஆகிய கட்சிகள் இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

நாட்டின் தலைநகரை கைப்பற்றும் முயற்சியில் மூன்று கட்சிகளும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டன. அந்த வகையில் கடந்த முறை இழந்த டெல்லியை இம்முறை மீட்கவும், ஆட்சி அதிகாரத்தை தக்க வைக்க ஆம் ஆத்மியும், தோல்வி முகத்தினை மாற்ற காங்கிரசும் முயற்சிகள் மேற்கொண்டன.

டெல்லியை பொறுத்தமட்டில் காங்கிரஸ் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 66 இடங்களில் போட்டியிடுகிறது. அதன் கூட்டணி கட்சியான ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சிக்கு நான்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
அனைத்து கட்சியினரும் தங்களின் தேர்தல் அறிக்கையில் டெல்லி மக்களுக்கு பல்வேறு இலவச திட்டங்களை அறிவித்து தேர்தலை சந்திக்கின்றனர். இதனால் டெல்லி சட்டசபை தேர்தல் கடுமையான

முக்கிய தலைவர்கள் தொகுதிகள்

ஆம் ஆத்மி கட்சி சார்பில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் இவரை எதிர்த்து பாஜக சார்பில் சுனில் யாதவ், காங்கிரஸ் கட்சி சார்பில் முதல் முறையாக களம் காணும் ரோமஸ் சபர்வால் புதுடெல்லி தொகுதியில் போட்டியிடுகின்றனர்.

ஆம் ஆத்மி கட்சி சார்பில் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவினை எதிர்த்து பாஜக சார்பில் ரவி நேகியும் பாட்பர்கஞ்ச் தொகுதியில் போட்டியிடுகின்றனர்.

சாந்தினி சவுக் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து காம்க்கிரஸ் கட்சி சென்ற அல்கா லம்பாவும், ஆம் ஆத்மி கட்சி சார்பில் பர்லட் சிங் சாவ்னி, பாஜக சார்பில் சுமன் குமார் குப்தா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

மும்முனை போட்டியில் டெல்லி சட்ட மன்ற தேர்தல்

டெல்லி சட்டபேரவையில் கடந்த 2015 ஆம் ஆண்டு தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 67 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியினை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :பரமக்குடியில் இளைஞர் கொடூரக்கொலை - கொலையாளியை தேடும் பணிகள் தீவிரம்

Intro:Body:

blank 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.