தென்மேற்கு ஆசிய நாடான ஏமனில் அதிபர் மன்சூர் ஹாடி தலைமையிலான அரசுக்கு எதிராக ஹவுதி கிளர்ச்சிப் படை பல ஆண்டுகளாக தாக்குதலில் ஈடுபட்டுவருகிறது. மேலும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுத உதவியும், நிதி உதவியும் ஈரான் அளித்து வருவதாகக் கூறப்படுகிறது. அவர்கள் மீது உள்நாட்டு அரசுப் படைகளும் அண்டை நாடான சவுதி அரேபியா தலைமையிலான நேசநாட்டுப் படைகளும் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், வடமேற்கில் மாரீப் மாகாணத்திலுள்ள அல்-மிலா பகுதியில் ஏமன் ராணுவப் பயிற்சி முகாமை குறிவைத்து நேற்று முன்தினம் (சனிக்கிழமை) ஏவுகணைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இத்தாக்குதலில் 80 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இ்ருப்பினும், இத்தாக்குதலுக்கு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்கவில்லை. ராணுவ முகாம் அருகிலுள்ள ஒரு மசூதியை குறிவைத்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். அதிபரின் பாதுகாப்பு வீரர்கள் பலர் இந்தத் தாக்குதலில் உயிரிழந்தனர். 2018ஆம் ஆண்டு அமைதி ஒப்பந்தத்தில் அந்நாடு கையெழுத்திட்டபோதிலும், தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவிவருகிறது.
இதையும் படிங்க: ஜம்முவில் ஐஐடி, ஐஐஎம் - ஸ்மிரிதி இரானி தகவல்