அரசியல் தலைவர்களின் வீட்டு திருமணம் நட்சத்திர திருமண மண்டங்களில், பிரமாண்ட முறையில் நடைபெறுவது வழக்கம். கரோனா காலத்தில் கூட பல தலைவர்களின் வீட்டு திருமணம் விமரிசையாகவே நடைபெற்றது. ஆனால், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தனது மகளின் திருமணத்தை எளிய முறையில் அரசின் அதிகாரப்பூர்வ வீட்டில் (முதலமைச்சர் இல்லம்) நடத்தியுள்ளார்.
![முதலமைச்சர் வீட்டு திருமணம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/img-20200615-wa00331592199476523-52_1506email_1592199488_402_1506newsroom_1592206312_975.jpg)
மென்பொருள் நிறுவனத்தில் இயக்குநராக பணியாற்றிவரும் பினராயி விஜயனின் மகள் வீனா விஜயனுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தலைவர்களில் ஒருவரான முகமது ரியாஸுக்கும் இன்று திருமணம் நடைபெற்றுள்ளது.
மிக எளிமையான முறையில் நடைபெற்ற இத்திருமணத்தில் கரோனா வழிகாட்டுதல்கள் முழுமையாக பின்பற்றப்பட்டன. 50க்கும் குறைவானவர்கள் மட்டுமே இந்த விழாவில் கலந்துகொண்டனர். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அப்துல் காதரின் மகன் ரியாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு: இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மீது பாய்ந்த வழக்கு