கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டத்தை சேர்ந்தவர் மருத்துவர் அஸ்வினி சிதானந்தா. கிராமத்தில் பிறந்து அரசு பள்ளியில் படித்த இவர், தற்போது சாதனையாளராக திகழ்கிறார். பெல்காம் அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்பை முடித்த இவர், ராஜீவ் காந்தி சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பெங்களூரு மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நுண் உயிரியல் உயர் படிப்பில் தங்க பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.
அஸ்வினியின் தந்தையான சிதானந்தா சோன்டாகாரா விவசாயம் செய்து தனது குழந்தைகளை படிக்க வைத்துள்ளார். பின்னர், துரதிர்ஷ்டவசமாக அவர் உயிரிழந்தார். இருப்பினும், உறுதியாக இருந்த அஸ்வினி, தங்க பதக்கத்தை வென்று மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறார். பெலகாவி மாவட்ட மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு தற்போது அவர் சிகிச்சை அளித்துவருகிறார். விடுமுறைக்குக்கூட வீட்டுக்கு வராமல் சேவை செய்துவரும் அவரை மக்கள் பாராட்டிவருகின்றனர்.
இதையும் படிங்க: கரோனாவின்போது உயிரிழக்கும் செவிலியர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் - ராகுல் காந்தி