ETV Bharat / bharat

பல மாநிலங்களின் எதிர்ப்பை மீறி நிறைவேறிய அணை பாதுகாப்பு மசோதா!

author img

By

Published : Aug 3, 2019, 12:01 AM IST

டெல்லி: நாடு முழுவதும் உள்ள அணைகளைப் பாதுகாக்கும் அணை பாதுகாப்பு மசோதாவை கடும் எதிர்ப்புகளையும் மீறி மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது.

அணை பாதுகாப்பு மசோதா

நாடு முழுவதும் உள்ள அணைகளைப் பாதுகாக்க அணை பாதுகாப்பு மசோதாவை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இந்தியாவின் முன்னணி நீர் பங்கீட்டு நிபுணர்கள், சர்வதேச நிபுணர்களுடன் ஆலோசனை செய்த பிறகே இந்த மசோதாவை இயற்றப்பட்டதாக மத்திய அரசு கூறியுள்ளது.

நாடு முழுவதும் உள்ள 92 சதவீத ஆறுகள் இரு மாநிலங்களுக்கிடையே ஓடுவதால் இந்த மசோதா மிக அவசியமென மசோதாவை தாக்கல் செய்த மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவாத் கூறியுள்ளார். மேலும், நாடு முழுவதும் உள்ள அணைகளுக்கு ஒரே மாதிரியான வழிமுறைகளை வகுக்க இச்சட்ட மசோதாவை உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்தார். இந்த மசோதாவின் படி அணை பாதுகாப்பிற்கான கொள்கைகளை தேசிய கமிட்டி உருவாக்கும் எனவும், அதனை தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் நிறைவேற்றும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவாத்
மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவாத்

உதாரணமாக, தமிழ்நாட்டில் உள்ள முல்லைப் பெரியாறு அணை கேரளாவில் இருக்கும் போது அந்தந்த மாநில அணை பாதுகாப்பு அமைப்பு செய்ய வேண்டியவற்றை இந்த தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் செயல்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மத்திய அரசு அணைகளின் மீது முழு அதிகாரத்தையும் எடுத்துக் கொள்வதால் மாநிலங்களின் உரிமைகள பறிபோகும் என கூறி கடந்த மாதம் 29ஆம் தேதி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டது.

முல்லை பெரியாறு அணை
முல்லை பெரியாறு அணை

ஆனால், அதையும் மீறி மத்திய அரசு இந்த மசோதாவை இன்று நாடாளுமன்றத்தில் குரல் வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்றியுள்ளது. இதற்குப் பின் மாநிலங்களவையிலும் தேசிய அணை பாதுகாப்பு மசோதா அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

Intro:Body:

Lok Sabha bill passed

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.