மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் நகரத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை அவருடைய அண்டை வீட்டைச் சேர்ந்த நால்வர் தீவைத்து எரித்துள்ளனர். இது குறித்து காவல் கண்காணிப்பாளர் அமித் சங்கி கூறுகையில், "மோதி நகர் காவல் நிலையத்திற்குள்பட்ட பகுதியில்தான் சம்பவம் நடந்துள்ளது. தீ காயத்தால் படுகாயமடைந்த இளைஞர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மோதலைத் தொடர்ந்து இளைஞரின் மீது நால்வர் மண்ணெண்ணெய்யை ஊற்றி எரித்துள்ளனர். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 50 விழுக்காடு தீக்காயம் இளைஞருக்கு ஏற்பட்டுள்ளது. மூவரை கைதுசெய்துள்ளோம். மற்றொருவரை தேடிவருகிறோம்" என்றார்.
இச்சம்பவம் தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்காததாகக் கூறி கமல் நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசை மத்தியப் பிரதேச பாஜக மாநில தலைவர் ராகேஷ் சிங் விமர்சித்துள்ளார். அரசு இயந்திரம் சரியாக இயங்கவில்லை என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு. இந்த பிரச்னையை அனைத்து மட்டத்திலும் எழுப்புவோம் என ராகேஷ் சிங் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பிகார் மனிதச் சங்கிலி: காங்கிரஸ், ஆர்.ஜே.டி. எதிர்ப்பு