ETV Bharat / bharat

பால் அதிகம் அருந்தினால் மார்பகப் புற்றுநோய் வருமாம்! - மார்பக புற்றுநோய்

பால் அதிகம் அருந்தினால் மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரைச் சேர்ந்த ஒரு ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Dairy milk intake may up breast cancer risk

author img

By

Published : Feb 26, 2020, 10:32 PM IST

ஒரு நாளைக்கு கால், அரை அல்லது ஒரு கப் பால் அருந்தினால் மார்பகப் புற்றுநோய் வருவதற்கு 30 முதல் 50 விழுக்காடு வாய்ப்புள்ளதாக நியூயார்க்கைச் சேர்ந்த ஆராய்ச்சி மையம் ஒன்று தெரிவித்துள்ளது.

மேலும் சில பேர் ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று கப் பால் அருந்தினார்கள். அப்படி அதிகமாக பால் அருந்துபவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் 70 முதல் 80 விழுக்காடு இருக்கும் எனவும் அந்த ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனை நிரூபிக்கும் வகையில், சர்வதேச தொற்றுநோயியல் இதழ் ஒரு ஆராய்ச்சியை நடத்தியது. அதன்படி, இந்த இதழ் 53 ஆயிரம் வட அமெரிக்க பெண்களை எட்டு ஆண்டுகளாகக் கண்காணித்துவந்தது. ஆராய்ச்சியின் தொடக்கத்தில் யாரும் புற்றுநோயால் பாதிப்படையவில்லை என்பதை உறுதிசெய்தனர்.

பின்பு 24 நான்கு மணிநேரமும் அவர்களது உணவுப் பழக்கம், உடல் செயல்பாடு முழுவதும் கண்காணிக்கப்பட்டு ஆராய்ச்சி முடிவில் மொத்தம் ஆயிரத்து 57 பேருக்கு புற்றுநோய் வந்துள்ளது எனக் கண்டறியப்பட்டது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அனைவரும் அதிகமாகப் பால் அருந்துபவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

மேலும் சோயா அதிகமாக உட்கொண்டால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் எனப் பரவலாக ஒரு கருத்து நிலவிவருகிறது. ஆனால் சர்வதேச தொற்றுநோயியல் இதழ் வெளியிட்ட ஆய்வறிக்கையில் சோயா தயாரிப்புகளுக்கும் மார்பக புற்றுநோய்க்கும் இடையில் தெளிவான தொடர்புகள் எதுவும் காணப்படவில்லை எனத் தெரிகிறது.

ஆனால் குறைவாகப் பால் அருந்துபவர்கள் அல்லது பால் சுத்தமா அருந்தாதவர்களை ஒப்பிடுகையில், பால் அதிகம் அருந்துவர்களுக்கு அதிக நோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அறிக்கை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: ராஜஸ்தானில் ஆற்றில் விழுந்த தனியார் பேருந்து: 24 பேர் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.