ETV Bharat / bharat

அம்பான் சூறாவளி: கப்பல்கள், மீன்பிடி படகுகள் துறைமுகத்திற்கு திரும்ப வலியுறுத்தல் - அம்பான் சூறாவளி

அம்பான் சூறாவளி அடுத்த 24 மணி நேரத்தில் கடுமையான புயலாக தீவிரமடைய வாய்ப்புள்ளதால் மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களின் கடல்பகுதிகளை சேர்ந்த கப்பல்கள், மீன்பிடி படகுகளை துறைமுகத்திற்குத் திருப்ப இந்திய கடலோர காவல் படை வலியுறுத்தியுள்ளது.

அம்பான் சூறாவளி
Cyclone Amphanஅம்பான் சூறாவளி
author img

By

Published : May 17, 2020, 3:15 AM IST

வங்க கடலில் உருவான அம்பான் புயல் மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்திய கடலோர காவல்படை இந்த இரு மாநிலங்களிலும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கை பணிகளை தொடங்கியுள்ளது.

அதன்படி மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களில் இருந்து வங்க கடலுக்கு மீன்பிடிக்க சென்ற கப்பல்கள், மீன்பிடி படகுகளை துறைமுகத்திற்குத் திரும்புமாறு கடலோர காவல்படை வலியுறுத்தியுள்ளது.

மேலும் இந்த தகவல் உள்ளூர் மொழியில் வழங்கப்பட்டது என்றும் மக்களை பாதுகாக்கும் பணியில் அதிக கவனம் செலுத்தி வருவதாக சிபிஆர்ஓ கொல்கத்தா தெரிவித்துள்ளது.

இந்த சூறாவளி ஆரம்பத்தில் மே 17 வரை வடமேற்கு நோக்கி நகர்ந்து பின்னர் மே 18-20 தேதிக்கு இடையில் வடக்கு-வடகிழக்கு நோக்கியும் வடக்கு வங்காள விரிகுடாவை நோக்கியும் செல்ல வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த ஐந்து, ஆறு நாள்களுக்கு ஆந்திரா மற்றும் மேற்கு வங்க கடற்கரைகளுக்கு வெளியேயும் “பாதகமான வானிலை” இருக்கும் என்று வானிலை நிறுவனம் கணித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:புதிதாக உருவான உம்பன் புயல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.