இதுகுறித்து புதுச்சேரி காங்கிரஸ் உறுப்பினர் சூசை ராஜ் மாநில சைபர் கிரைமில் அளித்துள்ளப் புகாரில், "புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம், புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கட்சித் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியம் ஆகியோர் குறித்து தவறான வார்த்தைகளால் பேசி, அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு அவதூறு பரப்பப்பட்டு வருகிறது.
அதனைப் பரப்பிவரும் புதுச்சேரி கூடபாக்கப்பகுதியைச் சேர்ந்த உளவாய்க்கால் சந்திரசேகரன் என்பவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.