கரோனா தொற்றை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் கடுமையாகப் போராடி வருகின்றன. மேலும் தடுப்பூசி குறித்து தொடர்ந்து பல ஆய்வுகள் நடத்திவருகின்றனர்.
இந்நிலையில், கர்நாடகா மாநிலம் ஸ்ரீநகரில் வசிக்கும் அமர்நாத் என்பவர், ஒரு தனியார் நிறுவனத்தில் திரவப் பொருட்களின் விநியோகஸ்தராக பணியாற்றி வருகிறார். இவரை தொடர்புகொண்ட சைபர் கிரைம் குற்றவாளிகள் சிலர், கரோனா தடுப்பூசி தயாரிப்பதற்காக மேகாலயாவின் பூஜா மூலிகை நிறுவனத்திடமிருந்து திரவத்தை வாங்கி இங்கிலாந்து நிறுவனத்திற்கு வழங்கினால் இவருக்கும் கமிஷன் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
இதையடுத்து, அமர்நாத்தும் அவர்களின் வார்த்தைகளை நம்பி 13 லட்சம் ரூபாயை கொடுத்துள்ளார். சில நாள்களுக்குப் பிறகு, அவர்களிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை. இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தச் சம்பவம் குறித்து காவலர்கள் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க:வேலூரில் ஒரேநாளில் 110 பேருக்கு கரோனா!