காவரி நதிநீர் பங்கீடு தொடர்பான முடிவுகளை எடுக்கும் தன்னாட்சி அமைப்பாக காவிரி மேலாண்மை வாரியம் திகழ்கிறது. காவிரி நீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுவை உள்ளிட்ட மாநிலங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசின் பிரநிதிகளும் இந்த மேலாண்மை வாரிய உறுப்பினர்களாக உள்ளனர்.
காவிரி நதி நீர் உரிமையை நிலைநாட்டும் அமைப்பாகக் கருதப்படும் தன்னாட்சி அமைப்பான இது, தற்போது மத்திய நீர்சக்தி அமைச்சகமான ஜல்சகத்தி துறையின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந் தற்போது வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பின்படி, காவிரி, கிருஷ்ணா, கோதாவரி உள்ளிட்ட நதி நீர் மேலாண்மை வாரியங்கள் மத்திய நீர் ஆற்றல் அமைச்சகத்தின் கீழ் இனி இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தன்னாட்சி அமைப்பாக இயங்கி வந்த காவிரி ஆணையம் உள்ளிட்ட மேற்கண்ட அமைப்புகள் இனி நேரடியாக மத்திய அமைச்சகத்தின் கீழ் இயங்கவுள்ளன.
இதையும் படிங்க: ஏர் இந்தியாவை ஏலம் கேட்க காலக்கெடு நீட்டிப்பு