மேற்கவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஹாக் மெர்கண்டைல் நிறுவனம் பணமோசடியில் ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து வருவாய் புலனாய்வு இயக்குநரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் அலுவலர்கள் கொல்கத்தாவில் உள்ள அந்நிறுவனத்தின் அலுவலகத்தில் சோதனை செய்தனர்.
அப்போது, அந்த நிறுவனத்தில் துப்புரவு பணியில் ஈடுபட்ட ஒருவர், குப்பைகளை பொருக்குவதுபோல் பணத்தை பொருக்கி கட்டிடத்தின் ஆறாவது மாடியிலிருந்து கீழே கொட்டியுள்ளார். இதனை கீழே இருந்து பார்த்த மக்கள் பணத்தை அள்ளிச் சென்றனர். 2000, 500, 100 ஆகிய ரூபாய் நோட்டுகள் மழைபோல் கீழே விழுந்த சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
இதையும் படிங்க: போரில் படுகாயமடையும் ராணுவ வீரர்களுக்கான ஓய்வூதியம் வழங்குவதில் உறுதி!