ஹைதராபாத்: உலகளாவிய கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்து வருவதாகத் தெரிகிறது. ஜூன் 23 அன்று ப்ரெண்ட் கச்சா 43.14 டாலரை தொட்டது. அதுவே ஜூன் 22ஆம் தேதி 2.1 விழுக்காடு அளவு உயர்ந்திருந்தது. மறுபுறம், WTI கச்சா எண்ணெய்யின் விலை 21 ஆண்டுகள் இல்லாத சரிவை கண்ட பின் இருமடங்காக தற்போது உயர்ந்துள்ளது. இந்த தரத்தில் கச்சா எண்ணெய்யின் விலையானது வர்த்தகமாகும் என்று கூறப்படுகிறது.
இந்த போக்கு பெரும்பாலும் மூன்று காரணங்களால் ஏற்படுகிறது. அவை,
- முதலாவதாக, ஒரு நாளைக்கு 9.7 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் உற்பத்தியை நிறுத்திவைத்த ஓபெக்
- இரண்டாவதாக அமெரிகாவின் சுத்திகரிக்கப்பட்ட தயாரிப்பு சரக்குகளின் சந்தை வீழ்ச்சி
- மூன்றாவது சிறிதளவில் தேவை அதிகரித்தது.
இந்த முன்னேற்றங்கள் இருந்தபோதிலும்கூட, கச்சா எண்ணெய் விலைகள் குறுகிய மற்றும் நடுத்தர காலப்பகுதியில் பல மாற்றங்களை நிகழ்த்தி இருக்கிறது. இது இந்தியாவிற்கும், உலகின் பிற நாடுகளின் பொருளாதார கொள்கையில் தாக்கங்களை ஏற்படுத்தும்.
“மலிவான கச்சா” என்பது புதிய இயல்பு:
உலகின் மிகப்பெரிய கச்சா இறக்குமதியாளரான சீனாவில் கரோனா நோய்க் கிருமியின் தாக்கம் மீண்டும் எழுச்சி பெறக்கூடும் என்ற அச்சங்கள் உள்ளன. இந்த முன்னேற்றங்கள் உலகப் பொருளாதாரத்தை மேலும் மந்தநிலையை நோக்கித் தள்ளக்கூடும். அதாவது குறைந்த பொருளாதார செயல்பாடுகள் மற்றும் கச்சா எண்ணெய்யின் தேவைகள் குறையும்.
இறுதியில் இந்தச் சூழல்கள் குறைந்த கச்சா எண்ணெய் விலையை ஏற்படுத்தும். மறுபுறம், சூறாவளி பருவத்தின் ஆரம்பம் கச்சா எண்ணெய் விலைகளுக்கு ஒரு பெரிய சவாலாக உள்ளது. இது எதிர்காலத்தில் சிறந்த விலைகள் குறித்த எந்த நம்பிக்கையையும் குறைக்கக்கூடும். இதனால் ‘மலிவான கச்சா’ புதிய இயல்பானதாக இருக்கும், அதனை உலகம் சமாளிக்க வேண்டும்.
இந்தியாவுக்கான தாக்கங்கள்:
உலகெங்கிலும் உள்ள புவி, அரசியல் மற்றும் பொருளாதார முன்னேற்றங்களைக் கருத்தில்கொண்டு, கச்சா எண்ணெய் விலைகள் மீண்டும் ஒரு பீப்பாய்க்கு 70 டாலர் என்ற அளவிற்கு உயர்கின்றன என்பது தெளிவாகிறது. சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் இந்தியாவுக்கு அதிக கட்டுப்பாடு இல்லை என்றாலும், கச்சா எண்ணெய் விலையின் தள்ளாட்டங்கள் இந்தியாவின் பொருளாதார கொள்கையில் தாக்கங்களை ஏற்படுத்தும்.
தற்போதைய சூழலில், குறைந்த விலையில் கச்சா எண்ணெய்யை இந்திய அரசு கொள்முதல் செய்வதால், நல்ல லாபம் ஈட்டுகிறது. மேலும் இது 507.64 பில்லியன் டாலர் மதிப்புள்ள அந்நிய செலாவணி இருப்புக்களை வைத்து நம்மால் புரிந்துகொள்ள முடியும். கச்சா எண்ணெய்யில் மிகுந்த பங்கு வகிக்கும் அந்நிய செலாவணி, தற்போது இறக்குமதி குறைவாலும் வலுவாகக் காணப்படுகிறது. இதன் சராசரி 2019இல் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 4.5 மில்லியன் பீப்பாய்கள் ஆகும்.
பெரிய அளவில் வர்த்தகங்களை கருத்தில்கொண்டு திட்டங்களை வகுக்க வேண்டும், அது சிறிய, பெரிய, நடுத்தர என்ற மூன்று வகையில் அமையவேண்டும். அதன்மூலம் நுகர்வோரின் வாங்கும் திறனை மேம்படுத்தமுடியும். மேலும் உள்நாட்டு தேவைகள் தூண்டப்படும். இது நாட்டின் பொருளாதாரத்தை புதுப்பிக்க காலத்தின் தேவையாகும். ஜூன் 24ஆம் தேதி வரை கடந்த 15 நாட்களுக்கு டெல்லி விலை நிலவரப்படி பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ. 8.88ஆக அதிகரித்துள்ளது. மேலும் டீசல் லிட்டருக்கு ரூ. 7.97ஆக அதிகரித்துள்ளது.
இக்காலத்தில், கச்சா எண்ணெய்யை மலிவாகக் கிடைத்தால், சேமித்து வைப்பதற்கான நமது திறனை மேம்படுத்துவது வளர்ச்சியை தரும். கூடுதலாக செலவினங்களை குறைக்கும். தற்போது இந்தியாவில் 39 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய்யை சேமிக்கும் திறன் உள்ளது. இதை வைத்துகொண்டு நாட்டிற்கு ஒன்பது நாட்களுக்கான எரிபொருள் தேவையை பூர்த்திசெய்ய முடியும். இருப்பினும், ஆசிய நாடுகளான சீனா, ஜப்பான் ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் சேமிப்புத் திறன் மிகக் குறைவு. அதில் சீனா 550 மில்லியன் பீபாய்களும், ஜப்பான் 528 பீப்பாய்களும் சேமிக்க திறன் கொண்ட நாடுகளாகும்.
கச்சா எண்ணெய் விலை என்பது எப்போதும் நிலையற்ற தன்மையைக் கொண்டிருக்கும். அதுவே இந்தியாவின் கட்டுக்குள்ளும் அடக்க இயலாது. நாட்டின் எரிசக்தி பாதுகாப்பிற்காக இத்தகைய வளத்தை நீண்டகாலமாக நம்பியிருப்பது என்பது நாட்டிற்கு பொருளாதார மற்றும் திட்டமுறை செலவுகளைக் கொண்டிருக்கும். விரைவில் இந்த நடவடிக்கைகளை அரசு மேற்கொள்வேண்டும். அது சிறப்பானதாக இருக்க வேண்டும். நம் நாட்டிற்கு தேவையானது ஒரு வலுவான அரசியல் நகர்வுகள் தான்.