ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் அமைந்துள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே போர் விதிமுறைகளை மீறி பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்தத் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
இந்திய எல்லைக்குள் பயங்கரவாதிகளை ஊடுருவ செய்யவே எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்து மீறலில் ஈடுபட்டு வருகிறது என இந்திய ராணுவம் குற்றம் சாட்டி வருகிறது.
இதனால் இந்திய எல்லைக்குள் ஊடுருவும் பயங்கரவாதிகளைத் தடுக்கும் நோக்கில், ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர், காவல் துறையினர் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதே போன்று சோபியான் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகளில் ஜெய்ஷ்-இ-முகமது, ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்த எட்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதையும் படிங்க : தெலங்கானாவில் 'போனலு' பண்டிகைக்கு அனுமதி