கரோனா வைரஸ் நோயால் பல உலக நாடுகள் பெரும் பாதிப்படைந்துள்ளன. இந்தியாவில் மட்டும் 649 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் தடுப்பு நடவடிக்கைக்காக பலர் தங்களின் ஊதியத்தை வழங்கியுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில ஆளுநர்கள் தங்களின் ஒரு மாத ஊதியத்தை வழங்கிய நிலையில், மத்திய ஆயுத காவல் படையைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் தங்களின் ஒரு நாள் ஊதியத்தை வழங்கியுள்ளனர். இதற்காக, பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு 33.81 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய அரசு செய்தித் தொடர்பாளர், "இந்த முடிவை ஒருமனதாக எடுத்துள்ளோம். இம்மாதிரியான இக்கட்டான சூழ்நிலையில் நாட்டுடன் துணை நிற்பது எங்கள் கடமை. இந்த நிதியுதவியை தாழ்மையுடன் அளிக்கிறோம்" என்றார்.
இதையும் படிங்க: கரோனா அச்சுறுத்தல்: கேரளாவில் தவிக்கும் வெளிமாநில தொழிலாளர்கள்