இதுகுறித்து தேர்தல் ஆலுவலர் அளித்துள்ள பேட்டியில், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் ரூ.249 கோடி மதிப்புள்ள மதுபானம், ரூ.1214.16 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள், ரூ.972 மதிப்புள்ள தங்கம், விலையுயர்ந்த கற்கள், ரூ.53.16 கோடி இலவசப் பொருட்கள் என மொத்தம் ரூ.3274.18 கோடி மதிப்பு இருக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் ரூ.785.26 கோடி பணமாகப் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த பணம், பொருட்கள் அனைத்தும் நான்காம் கட்ட மக்களவைத் தேர்தல் நடவடிக்கையின் போது பறிமுதல் செய்யப்பட்டது எனக் கூறப்படுகிறது. 4ஆம் கட்டத் தேர்தல் 72 மக்களவைத் தொகுதிக்காக, ஏழு மாநிலங்களில் நடைபெற்றது. மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் மே 19ஆம் தேதி முடிகிறது. தேர்தல் முடிவுகள் மே 23ஆம் தேதி அறிவிக்கப்படுகிறது.